‘சரஸ்வதி’ பெயர் மாற்றம் - சென்சார் பிரச்சினை காரணமா?

‘சரஸ்வதி’ பெயர் மாற்றம் - சென்சார் பிரச்சினை காரணமா?
Updated on
1 min read

தணிக்கையில் சர்ச்சையானதால் ‘சரஸ்வதி’ படத்தின் பெயர் ‘எஸ்.சரஸ்வதி’ என மாற்றப்பட்டுள்ளது.

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சரஸ்வதி’. தெலுங்கில் நாளை (மார்ச் 6) வெளியாகவுள்ளது. இப்படத்தினை முதலில் இருந்தே ‘சரஸ்வதி’ என்று தான் விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், இதன் தணிக்கையின் போது கடவுள் பெயரில் படத்தின் பெயர் இருப்பதால், அதனை மாற்ற அறிவுறித்திருக்கிறார்கள் தணிக்கை அதிகாரிகள் என கூறப்படுகிறது.

இதனை முன்வைத்து ‘சரஸ்வதி’ என்ற பெயரை ‘எஸ்.சரஸ்வதி’ என படக்குழு மாற்றியிருக்கிறது. இன்றைய போஸ்டர்கள் அனைத்திலும் ‘எஸ்.சரஸ்வதி’ என்றே விளம்பரப்படுத்தி இருக்கிறது படக்குழு. முன்னதாக சுஹாஸ் நடிப்பில் உருவான ‘ஹே பகவான்’ என்ற படமும் இதே போல் சர்ச்சையில் சிக்கியது. பின்பு ‘ஹே பல்வநாத்’ என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முதல் படமாக ‘எஸ்.சரஸ்வதி’ என்ற படத்தினை உருவாக்கியுள்ளார். வரலட்சுமி இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ், பிரியா மணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘சரஸ்வதி’ பெயர் மாற்றம் - சென்சார் பிரச்சினை காரணமா?
மார்ச் 13-ல் ஓடிடியில் வெளியாகிறது ‘பூக்கி’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in