

மார்ச் 13-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ‘பூக்கி’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி தயாரிப்பில் வெளியான படம் ‘பூக்கி’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது இப்படம் மார்ச் 13-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படம் ஓடிடி தளத்தின் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷன், தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘பூக்கி’. இதற்கு எடிட்டிங் மற்றும் இசை உள்ளிட்ட பணிகளையும் கவனித்து தயாரித்திருந்தார் விஜய் ஆண்டனி. இப்படம் வெளியீட்டுக்கு முன்பாகவே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் விற்பனையாகிவிட்டன.
திரையரங்க வெளியீட்டில் மட்டும் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ’பூக்கி’ படத்துக்குப் பிறகு சசி இயக்கத்தில் உருவாகி வரும் ‘நூறு சாமி’படத்தினை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.