சாம் சி.எஸ் இசையமைக்கும் ‘மகா அவதார் பரசுராம்’

சாம் சி.எஸ் இசையமைக்கும் ‘மகா அவதார் பரசுராம்’
Updated on
1 min read

அஸ்​வின் குமார் இயக்​கத்​தில் உரு​வான அனிமேஷன் திரைப்​படம்​,‘ம​கா அவ​தார் நரசிம்​மா’. இந்​தப் படம் ரூ.300 கோடிக்​கும் மேல் வசூலித்​து ஆச்​சரியப்​படுத்​தி​யது.

இதையடுத்து மகா ​விஷ்ணு​வின் பத்து அவதா​ரங்​களை விவரிக்​கும் வகை​யில், மகா அவதார் சினி​மாடிக் யுனிவர்ஸை ஹோம்​பாளே பிலிம்ஸ் அறிவித்தது. அதன்​படி இந்​நிறு​வனம் 10 அவதா​ரங்​களில் 2-வது அவதா​ர​மாக ‘மகா அவதார் பரசு​ராம்’ படம் பற்றி அறி​வித்​திருந்​தது.

அஸ்வின் குமார் இயக்​கும் இப்​படம், க்ளீம் புரொடக் ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்​கப்​படு​கிறது. இதன் மோஷன் போஸ்​டரை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. இந்​தப் படம் 2027-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் வெளி​யாக உள்​ளது.

இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்துக்காக அவர், படம் உருவாவதற்கு முன்பே இசைப் பணியை தொடங்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசை முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட உள்ளன.

இந்த படத்தில் ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்துள்ளனர். 

சாம் சி.எஸ் இசையமைக்கும் ‘மகா அவதார் பரசுராம்’
தென் கொரிய அதிபருடன் நடிகை பிரியங்கா மோகன் சந்திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in