

நடிகை ருக்மணி வசந்த், ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் மூலம் இந்திய முழுவதும் பிரபலமானார். இப்போது யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தை முடித்துள்ள அவர், ஜூனியர் என்டிஆருடன் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தை ‘ஜய ஜய ஜய ஜய ஹே’ படத்தின் இணை எழுத்தாளரான நாஷித் முகமது ஃபாமி இயக்குகிறார். இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் ரொமான்டிக் காமெடி படமான இதில் அஜு வர்கீஸ், ஜகதீஷ், கலாரஞ்சனி மற்றும் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மார்ட்டின் பிரக்காட் ஃபிலிம்ஸ், பாலி ஜூனியர் பிக்சர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கிரீன் ரூம் புரொடக் ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. நிவின் பாலியின் 51-வது படமான இதன் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியுள்ளது.