‘யூத்’ படத்துக்கு ரிஷப் ஷெட்டி புகழாரம்

‘யூத்’ படத்துக்கு ரிஷப் ஷெட்டி புகழாரம்
Updated on
1 min read

’யூத்‘ படம் பார்த்துவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் புகழாரம் சூட்டியுள்ளார் ரிஷப் ஷெட்டி.

கென் கருணாஸ் இயக்கி, நடித்து வெளியான படம் ‘யூத்’. குறைந்த பொருட்செலவில் உருவான இப்படம் உலகளவில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

தற்போது ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே இப்படத்தினை பார்த்துவிட்டு கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான ரிஷப் ஷெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘யூத்’ படம் தொடர்பாக ரிஷப் ஷெட்டி, “நீண்ட காலங்களுக்கு பிறகு, ஒரு படம் முழுவதும் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்ததை உணர்ந்தேன். அன்பு, நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிரம்பியுள்ளது ‘யூத்’ திரைப்படம். இது அனைத்து பெற்றோர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான படமாகும்.

கதை, இயக்கம் மற்றும் நடிப்பு ஆகிய மூன்றையும் ஒருவரே ஏற்றுக் கொண்டு அத்தனை நுணுக்கமான ஆழத்துடன் கையாட்டியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஒவ்வொரு நடிகரும் திரையில் மிக இயல்பாக உயிர்ப்புடன் சித்திரிக்கப்பட்டு இருந்தனர்.

சுராஜ் வெஞ்சுரமுடு, தேவதர்ஷினி மற்றும் நண்பர்கள் குழு அனைவரையும் திரையில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இப்படத்தின் வெற்றியை முழுமையாக நம்பிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் விக்கி, எடிட்டர் நேஷ் மற்றும் தயாரிப்பாளருக்கு சிறப்புப் பாராட்டுக்கள். சகோதரர் கென் கருணாஸ் அவர்களே, நீங்கள் திரையுலகுக்கு ஒரு மிகப்பெரிய சொத்து” என்று தெரிவித்துள்ளார்.

‘யூத்’ படத்துக்கு ரிஷப் ஷெட்டி புகழாரம்
உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்யும் ஹார்முஸ் ஜலசந்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in