

நடிகை ராஷ்மிகா மந்தனா, நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ‘மைசா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இந்தப் படத்தை அன்ஃபார்முலா பிலிம்ஸ், ‘பான் இந்தியா’ படமாகத் தயாரிக்கிறது. இது, கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட ஆக் ஷன் த்ரில்லர் படம் என இயக்குநர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இப்படத்திலிருந்து வெளியான ராஷ்மிகாவின் தோற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படத்துக்கான ஆக் ஷன் காட்சி படப்பிடிப்பு கேரளாவில் விரைவில் தொடங்க இருக்கிறது. 16 நாட்கள் இக்காட்சியைப் படமாக்க உள்ளனர். இந்நிலையில் இந்த மிரட்டலான ஆக் ஷன் காட்சிக்கான பயிற்சியை நடிகை ராஷ்மிகா மந்தனா, தாய்லாந்தின் பாங்காங்கில் மேற்கொண்டுள்ளார்.
புகழ்பெற்ற ஸ்டன்ட் நிபுணர்களின் மேற்பார்வையில், மேம்பட்ட சாகச நுட்பங்கள் மற்றும் ஆக்ஷன் முறைகளைத் தினமும் சுமார் 8 மணி நேரம் ராஷ்மிகா பயின்று வருகிறார்.