முடிவுக்கு வந்தது ராஜமவுலியின் ‘வாரணாசி’ தலைப்பு பிரச்சினை

முடிவுக்கு வந்தது ராஜமவுலியின் ‘வாரணாசி’ தலைப்பு பிரச்சினை
Updated on
1 min read

ராஜமவுலி இயக்​கத்​தில் மகேஷ்​பாபு, பிரி​யங்கா சோப்​ரா, பிருத்​வி​ராஜ் நடித்து வரும் படம், ‘வாரணாசி’. இந்த தலைப்​பை, ஏற்​கெனவே பதிவு செய்து வைத்​திருப்​ப​தாகக் கூறி, தெலுங்கு திரைப்பட இயக்​குநர் சுப்பா ரெட்டி என்​பவர் புகார் கூறி​னார்.

இத்​தலைப்​பைக் கடந்த 2023-ம் ஆண்டு பதிவு செய்​தோம் என்​றும் பின்​னர் கடந்த ஜூலை​யில் புதுப்​பித்​திருப்​ப​தாக​வும் கூறிய அவர், அதை எப்​படி அவர்​கள் பயன்​படுத்த முடி​யும்? என்று கேள்வி எழுப்பி இருந்​தார். இது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதனால், ராஜமவுலி இயக்​கும் படத்​துக்கு ‘ராஜமவுலி​யின் வாரணாசி’ என்று தலைப்பை மாற்​றிய​தாகத் தகவல் வெளி​யானது.

இந்​நிலை​யில் இப்​பிரச்​சினைக்கு சுமுக தீர்வு ஏற்​பட்​டுள்​ளது. இயக்​குநர் சுப்பா ரெட்டி ‘வாரணாசி’ தலைப்​பின் உரிமையை ராஜமவுலி படக்​குழு​விடம் ஒப்​படைத்​துள்​ளார். இதுபற்றி சுப்பா ரெட்டி கூறும்​போது, ‘‘எனக்கு மிக​வும் பிடித்த நடிக​ரான மகேஷ் பாபு, இயக்​குந​ரான ராஜமவுலி ஆகியோரின் மிகப்​பெரிய திரைப்​படத்​துக்கு சிறிய அளவி​லா​வது நான் பங்​களிக்க முடிந்​ததில் பெரு​மை.

ஒரு நல்ல படத்​துக்​காக இந்​தத் தலைப்பை வழங்​கு​வ​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.தலைப்​புக்​காக எந்​த​வித பணப்​பரிவர்த்​தனை​யும் நடக்​க​வில்லை என்​றும் ராஜமவுலி மீதான மரி​யாதை​யின் அடிப்​படை​யிலேயே இந்த முடிவை எடுத்​த​தாக​வும் விளக்​கம்​ அளித்​துள்​ளார்​.

முடிவுக்கு வந்தது ராஜமவுலியின் ‘வாரணாசி’ தலைப்பு பிரச்சினை
கிறிஸ்டோபர் நோலன்: மனசாட்சியை உலுக்கும் கலைஞன் | படைப்புலகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in