சந்தீப் கிஷன் நடிக்​கும் ‘பவர் பேட்டா’

சந்தீப் கிஷன் நடிக்​கும் ‘பவர் பேட்டா’
Updated on
1 min read

திரை​யுல​கில் அறி​முக​மாகி 16 ஆண்​டு​கள் நிறைவு செய்துள்ள நடிகர் சந்தீப் கிஷன், அடுத்து கிருஷ்ண சைதன்யா இயக்​கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார்.

மதி ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு மணி சர்மா இசையமைக்​கிறார். 70 எம்​எம் என்​டர்டெய்ன்​மென்ட்ஸ் நிறு​வனம் சார்​பில் விஜய் சில்​லா,சசி தேவி ரெட்டி தயாரிக்​கின்​றனர். இப்​படத்​துக்கு ‘பவர் பேட்​டா’ என்று தலைப்பு வைத்​துள்ளனர்.

இந்த டைட்​டில் போஸ்​டர் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. “இருண்ட, யதார்த்​த​மான மற்​றும் குறி​யீடு​கள் நிறைந்த டைட்​டில் போஸ்​டரில் ரத்​தத்​தில் தோய்ந்த சதுரங்க பலகை​யும் இடம் பிடித்​துள்​ளது. சதுரங்க காய்​கள் உடைந்​தும் விழுந்​தும் அல்​லது ஒரு வித​மான வெற்​றி​யின் தரு​வா​யில் நிற்​பது போன்​றும் தோன்​றுகின்​றன.

அதே நேரம் வன்​முறை​யால் கறைபட்டு நசுக்​கப்​பட்ட ரோஜா பூ, அந்த குழப்​பங்​களுக்கு மத்​தி​யில் இடம் பிடித்​திருக்​கிறது. இந்த காட்சி படத்​தின் கருப் பொருளான காதல் - கவுர​வம் - அரசி​யல்- ஆகிய​வற்​றுக்​கான குரலாக ஒலிக்​கிறது” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

சந்தீப் கிஷன் நடிக்​கும் ‘பவர் பேட்டா’
Welcome to Dongmakgol: மகிழ்வூட்டும் திரை மொழியில் யுத்தமும் மனிதமும் | ஓடிடி சினிமா அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in