உக்​ரைன்​ - ரஷ்யா போர் பின்னணியில் உரு​வாகும் ‘ஆபரேஷன் கங்​கா’

உக்​ரைன்​ - ரஷ்யா போர் பின்னணியில் உரு​வாகும் ‘ஆபரேஷன் கங்​கா’
Updated on
1 min read

உக்​ரைன்​– ரஷ்யா போரின் பின்​னணி​யில் இந்​தியா மேற்கொண்ட மீட்பு நடவடிக்​கைக்கு ‘ஆபரேஷன் கங்​கா’ என்று பெயர் வைத்​திருந்​தனர்.

இந்​தச் சம்​பவத்தை அடிப்​படை​யாகக் கொண்​டு, அதே பெயரில் உரு​வாகும் படத்​தில் மோகன்​லால் ஹீரோ​வாக நடிக்​கிறார். இதில் பாலிவுட் நடிகர் அர்​ஜுன் ராம்​பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்​ஸ், ஆர்​.​பார்த்​திபன் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர். வெளிநாட்டு நடிகர்​கள் மற்​றும் பல முன்னணி தொழில்​நுட்​பக் கலைஞர்கள் இதில் பணி​யாற்​றுகின்​றனர்.

மோகன்​லாலின் 367-வது படமான இதை, ‘மேப்​படி​யான்’ படத்தை இயக்​கிய விஷ்ணு மோகன் எழுதி இயக்​கு​கிறார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்​பில் கோகுலம் கோபாலன் தயாரிக்​கும் இப்​படத்​தின் இணைத் தயாரிப்​பாளர்​களாக பைஜு கோபாலன், வி.சி.பிர​வீன் பணி​யாற்​றுகின்​றனர். மெகா பட்​ஜெட்​டில் உரு​வாகும் இப்படத்தின் படப்​பிடிப்பு ஜார்​ஜி​யா​வில் ஏற்​கெனவே தொடங்கியுள்​ளது.

மோகன்​லால் விரை​வில் இதன் படப்​பிடிப்​பில் இணைய இருக்கிறார். போலந்​து, கசகஸ்​தான், டெல்​லி, டேராடூன், கொச்சி ஆகிய இடங்​களில் மொத்​தம் 180 நாட்​கள் படப்​பிடிப்பு நடத்​தத் திட்​ட​மிடப்பட்​டுள்​ளது. ‘துரந்​தர்’ இசையமைப்​பாளர் ஷாஷ்வத் சச்தேவ் இசை அமைக்​கிறார். புஷ்​பா, புஷ்பா 2 படங்​களுக்கு ஒளிப்ப​திவு செய்த மிரோஸ்​லா குபா ப்ரோசெக் ஒளிப்​ப​திவு செய்கிறார்.

உக்​ரைன்​ - ரஷ்யா போர் பின்னணியில் உரு​வாகும் ‘ஆபரேஷன் கங்​கா’
நவம்பர் மாதம் முதல் கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in