வெங்கி அட்லுரி இயக்கத்தில் நானி?

வெங்கி அட்லுரி இயக்கத்தில் நானி?
Updated on
1 min read

வெங்கி அட்லுரி இயக்கத்தில் நானி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

சூர்யா நடித்து வரும் ‘சூர்யா46’ படத்தினை இயக்கி வருகிறார் வெங்கி அட்லுரி. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்துக்குப் பிறகு நானி படத்தினை இயக்க வெங்கி அட்லுரி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதனையும் சித்தாரா நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது. இன்னும் இந்தக் கூட்டணி ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை.

‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் வெங்கி அட்லுரி. அவரது இயக்கத்தில் நானி என்பது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. சூர்யா படத்தினை முடித்துவிட்டு, நானி படத்தினைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், நானியும் சுஜித் இயக்கத்தில் நடிக்கவுள்ளதால், தேதிகள் எப்போது என்பது முடிவானவுடன் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா46’ படத்தில் சூர்யா, ரவீனா டண்டன், ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் நானி?
தேர்தல் முடிந்தவுடன் ‘கருப்பு’ வெளியீடு: ஆர்.ஜே.பாலாஜி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in