தேர்தல் முடிந்தவுடன் ‘கருப்பு’ வெளியீடு: ஆர்.ஜே.பாலாஜி தகவல்

தேர்தல் முடிந்தவுடன் ‘கருப்பு’ வெளியீடு: ஆர்.ஜே.பாலாஜி தகவல்

Published on

சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் சூர்யாவின் ‘கருப்பு’ வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை இயக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் ஆர்.ஜே.பாலாஜி.

அந்த விழாவில் ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “’கருப்பு’ படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது என்பதால் படத்தினை பற்றி பேச தொடங்கலாம் என நினைக்கிறேன். படம் வெளியாகும் முன்பு பயங்கரமாக படத்தைப் பற்றி பேசி, படம் வெளியான பின்பு பிடிக்கவில்லை என்றால் செம அடி அடிக்கிறார்கள். எப்போதுமே உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புவேன்.

ஒரு விஷயம் நாம் சொன்னால் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, அடுத்தமுறை சொன்னாலும் நம்புவார்கள். ‘கருப்பு’ படம் நன்றாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும். ’கருப்பு’ அப்டேட் குறித்து கடந்த ஒரு வருடமாக கேட்டு வருகிறார்கள். ஓடிடி உள்ளிட்ட விஷயங்களல் அடங்கி இருக்கிறது. கோடை விடுமுறைக்கு ‘கருப்பு’ வெளியாகும். சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் படம் வெளியாகும். அனைவரும் குடும்பத்துடன் காணும் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

தேர்தல் முடிந்தவுடன் ‘கருப்பு’ வெளியீடு: ஆர்.ஜே.பாலாஜி தகவல்
‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது? - கனடா விநியோகஸ்தரின் அறிவிப்பால் குழப்பம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in