உரு​வாகிறது ‘மட்டி’ 2-ம் பாகம்: இயக்​குநர் தகவல்

உரு​வாகிறது ‘மட்டி’ 2-ம் பாகம்: இயக்​குநர் தகவல்
Updated on
1 min read

மண் சாலைகளில் நடக்​கும் கார் பந்​த​யத்தை மையப்படுத்தி ‘மட்டி’ என்ற படத்தை இயக்​கிய​வர் பிரகபல். இந்​தப் படம் கவனிக்​கப்​பட்​டதை அடுத்து அவர் இயக்​கிய படம், ‘ஜாக்கி’. கிடா சண்​டையை மைய​மாக வைத்து உரு​வான இப்​படத்​தில் ‘மட்​டி’​யில் நடித்த யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் முதன்மை வேடங்​களில் நடித்​தனர்.

அம்மு அபி​ராமி நாயகி​யாக நடித்​தார். இந்​தப் படம் சமீபத்தில் திரையரங்​கில் வெளி​யானது. இப்​போது அமேசான் பிரைம் வீடியோ தளத்​தில் வெளி​யாகி​யுள்ள இப்​படம் டிரெண்​டிங்​கில் உள்​ளது. இதுபற்றி இயக்​குநர் பிரகபல் கூறும்​போது, “‘ஜாக்​கி’ கிடா சண்​டையை மையப்படுத்​திய கதை. அந்த சண்​டைக்​குள் இருக்​கும் வாழ்​வியல், கிடாவுக்​கும் அதை வளர்ப்​பவர்​களுக்​கு​மான பிணைப்பு ஆகிய​வற்றை கொண்டு அப்​படத்தை உருவாக்கினேன்.

அது தமிழ் மக்​களின் கலாச்​சா​ரத்​தோடு ஒன்​றிப் போன விளை​யாட்​டு. மண் சார்ந்த விளை​யாட்டு என்​ப​தால் அதை இயக்​கினேன். இது தியேட்​டர் ரிலீஸை விட, அமேசானில் வரவேற்​பைப் பெற்​றிருப்​பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாப் 10 படங்​களின் வரிசை​யில் ‘ஜாக்​கி’​யும் இடம்​பெற்​றுள்​ளது. இதற்​காக ரசிகர்​களுக்கு நன்​றி.

அடுத்து ‘மட்​டி’ படத்​தின் 2-ம் பாகத்தை இயக்க இருக்கிறேன். அதற்​கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்​கிறது. முதல் பாகத்​துக்​கும் இதற்​கும் தொடர்பு இருந்​தா​லும் கதைக் களம் வேறு இடத்​தில் நடக்கும். பான் இந்​தியா முறை​யில் அப்​படத்தை உருவாக்கு​கிறோம். முதல் பாகத்​தில் நடித்​தவர்​கள் இதிலும் நடிக்​கிறார்​கள். மற்ற மொழிகளில் இருந்​தும் நடிகர்​கள் நடிக்​கிறார்​கள். அதற்​கான பேச்​சு​வார்த்தை போய் கொண்​டிருக்​கிறது” என்​றார்.

உரு​வாகிறது ‘மட்டி’ 2-ம் பாகம்: இயக்​குநர் தகவல்
பாஜக கூட்டணிக்கு தயாராகிறதா தவெக? - மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை
உரு​வாகிறது ‘மட்டி’ 2-ம் பாகம்: இயக்​குநர் தகவல்
காளியம்மாள் ‘சாய்ஸ்’ அதிமுக ஏன்? - ஒரு விரைவுப் பார்வை
உரு​வாகிறது ‘மட்டி’ 2-ம் பாகம்: இயக்​குநர் தகவல்
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in