முதல் முயற்சியில் எம்பிபிஎஸ் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் வெற்றி 5% ஆக சரிவு - நீட் தேர்வை மறுஆய்வு செய்ய அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலை​வர் அன்​புமணி

பாமக தலை​வர் அன்​புமணி

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் முதல் முயற்​சி​யில் எம்​பி​பிஎஸ் சேரும் அரசு பள்ளி மாணவர்​களின் வெற்றி 5 சதவீத​மாக சரிந்​துள்​ளது என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது​தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: “தமிழகத்​தில் 2025- 26-ம் கல்​வியாண்​டில் அரசு பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத இட ஒதுக்​கீட்​டில் மருத்​து​வப் படிப்​பில் சேர முயற்​சித்த 650 மாணவர்​களில் வெறும் 33 பேர் (5 சதவீதம்) மட்​டுமே முதல் முயற்​சி​யில் வெற்றி பெற்​றுள்​ளனர். மீதமுள்ள 617 மாணவர்​களில் 235 பேர் 2-வது முறை​யாகவும், 283 பேர் 3-வது முறை​யாகவும், 91 பேர் 4-வது முறை​யாகவும் மீதமுள்ளோர் அதற்கு மேற்​பட்ட முறைகளும் எழுதி மருத்துவப் படிப்​பில் சேர்ந்​துள்​ளனர்.

ஐந்து ஆண்​டுகளுக்கு முன்பு 50 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக இருந்த அரசு பள்ளி மாணவர்​களின் முதல் முயற்சி வெற்றி விகிதம், தற்போது 5 சதவீத​மாக வீழ்ச்​சி​யடைந்​துள்​ளது. இதேபோல், பொது அரசு ஒதுக்​கீட்டு இடங்​களில் சேர்ந்த 8,053 மாணவர்​களில் 20 சதவீதம் பேரும் (1,613 பேர்), தனியார் கல்​லூரி நிர்​வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த 2,570 மாணவர்​களில் 30 சதவீதம் பேரும் (768 பேர்) மட்​டுமே முதல் முயற்​சி​யில் வெற்றி பெற்​றுள்​ளனர். சராசரியாக 3 முறை நீட் தேர்வு எழுத வேண்​டிய கட்​டாயம் ஏற்பட்டுள்​ள​தால், 17 வயதில் மருத்​து​வக் கல்​லூரிக்​குச் செல்ல வேண்​டிய மாணவர்​கள் 20 முதல் 22 வயதில்​தான் சேர முடி​கிறது.

இதற்​கிடையே நிகர்​நிலை பல்​கலைக்​கழகங்​கள் ஆண்டு கட்டணத்தை ரூ.29 லட்​சம் வரையிலும், மொத்த கட்​ட​ணத்தை ரூ.1.58 கோடி​யாகவும் உயர்த்​தி​யுள்​ளன. எனவே, மருத்​து​வக் கல்வியை அனைவருக்​கும் சாத்​தி​ய​மானதாக மாற்ற, நீட் தேர்வின் தாக்​கம் குறித்து ஆய்வு செய்து அதை ரத்து செய்​ய​வும், ஏழை மற்றும் நடுத்​தர மக்​களுக்கு எட்​டும் வகை​யில் மருத்​து​வக் கல்வி கட்​ட​ணத்​தைக் குறைக்​கவும் மத்​திய, மாநில அரசுகள் இணைந்து நட​வடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

image-fallback
அம்பத்தூர்: கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 பேர் கைது

X