புகழ்பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்: ரசிகர்கள் சோகம்

சலீம் குமார்

சலீம் குமார்

Updated on
1 min read

கொச்சி: புகழ்பெற்ற மலையாள நடிகரும் இயக்குநருமான சலீம் குமார் காலமானார். அவருக்கு வயது 56.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடக்க காலத்தில் மேடை நாடகங்களிலும், மிமிக்ரி கலைஞராகவும் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய சலீம் குமார், கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ‘இஷ்டமானு நூறு வட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். ‘தென்காசிப்பட்டணம்’, ‘மீச மாதவன்’, ‘கல்யாணராமன்’, ‘சி.ஐ.டி. மூசா’, ‘மாயாவி’ உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களில் இவரது நடிப்பு கொண்டாடப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ஆதமின் மகன் அபு’ படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சலீம் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர, நான்கு முறை கேரள மாநில திரைப்பட விருதுகளையும் அவர் வென்றுள்ளார். 

நடிகராக மட்டுமல்லாமல், ‘கறுத்த ஜூதன்’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும் முத்திரை பதித்துள்ளார். சலீம் குமாருக்கு சுனிதா என்ற மனைவியும், சந்து, ஆரோமல் என்ற இரு மகன்களும் உள்ளனர். இவரது மறைவுக்குத் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>சலீம் குமார்</p></div>
‘பரிமளா & கோ’ விமர்சனம்: வெண்ணெய் திரள... பானை நடுங்குது!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in