

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர், ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப் படுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி படம் வெளியாகிறது. ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளான மே 20ம் தேதி இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.