

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஐ அம் கேம்’ படத்தில் ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின், கதிர், கயாது லோஹர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துல்கரின் 40-வது படமான இந்த த்ரில்லர் படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.
துல்கர் சல்மான் தனது வேஃபரர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துள்ளது. “இப்படம் சுமார் 11 மாதங்களில் மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் திரைப்படம், ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது” என படக்குழு தெரிவித்துள்ளது.