பிரபாஸ் நடிக்கும் ‘ஃபவுஜி’ டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ்

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபவுஜி’ டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ஃபவுஜி'  திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் மற்றும் டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சியை பின்னணியாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் பிரபாஸ் நீண்ட முடியுடன் காயங்கள் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். 

இப்படம் குறித்து படக்குழுவினர் "ஃபவுஜி திரைப்படம் போர்க்களப் பின்னணியில் ஆக்‌ஷன் மற்றும் அழுத்தமான கதைக் களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சிறந்த தொழில்நுட்பத் திறனுடன் ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு நல்ல அனுபவத்தைத் தரும்" என்று தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி அறிமுகமாகிறார். இவர்களுடன் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா மற்றும் பானுச்சந்தர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பையும், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர். வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, படத்திற்கான அடுத்தகட்ட ப்ரோமொஷன் பணிகளைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபவுஜி’ டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ்
சண்முகபாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ - படப்பிடிப்பு தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in