

நடிகை ஜான்வி கபூர் | பெத்தி இயக்குநர் புச்சி பாபு சனா|
ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘பெத்தி’. புச்சி பாபு சனா இயக்கியுள்ள இப்படம் கடந்த 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியானது.
இப்படத்தில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம் மிகவும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு இயக்குநர் புச்சி பாபு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, பெண்கள் மீது எப்போதும் அளவற்ற மரியாதை உண்டு. எந்தவொரு பெண் கதாபாத்திரத்தையும் அவமதிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல.
பெத்தி திரைப்படத்தின் சில காட்சிகள் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் விரைவில் மாற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.