

நடிகை சமந்தா
நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம், ‘மா இன்டி பங்காரம்’.
தெலுங்கில் உருவான இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது. தெலுங்கில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் இப்போது வரை ரூ.87 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை சமந்தா, சோனி லிவ் தமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்துள்ளார். இத்தொலைக்காட்சிக்காக அவர் புதிய நிகழ்ச்சி ஒன்றை வழங்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், புதிய தொடக்கங்களை வரவேற்கவும் இந்த ஆண்டு எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. சோனி லிவ் தமிழ் உடன் இணைந்து இந்தப் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
சிறந்த, சுவாரஸியமான ஒரு திட்டத்துக்காக உழைத்து வருகிறோம். அதைப் பற்றிய விவரங்களை விரைவில் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.