

தமிழ், தெலுங்கில் முன்னணி இசை அமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள இவர், கதாநாயகனாக நடிக்கும் படம் ‘எல்லம்மா’. இதை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பலகாம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்டண்டாடி இயக்குகிறார்.
ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்கின்றனர். இதில் பார்சி என்ற கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கிறார். .
இப்படம் தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகிறது. இதில் சாய் பல்லவி அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் ஒருவர் கதாநாயகியாக நடிப்பார்கள் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது, மிருணாள் தாக்குரிடம் படக்குழு பேசி வருவதாகத் தெரிகிறது.
இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், சீதா ராமம் படம் மூலம் தென்னிந்தியாவிலும் புகழ்பெற்றார். அவர் தெலுங்கில் நடித்த ஹாய் நன்னா, பேமிலி ஸ்டார், கல்கி 2898 ஏடி, டெகாயிட் ஆகிய படங்கள் அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தன