குதிரையேற்​றப் பயிற்சி பெற்றார் மஞ்சு வாரியர்

குதிரையேற்​றப் பயிற்சி பெற்றார் மஞ்சு வாரியர்
Updated on
1 min read

பிரபல மலை​யாள நடிகை​யான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன், துணிவு உள்​ளிட்ட படங்​களில் நடித்​துள்​ளார். இவர், கேரளா​வில் ரகசி​ய​மாகக் குதிரையேற்ற பயிற்சி பெற்​றுள்​ளார்.

எர்​ணாகுளத்​தில் உள்ள தனது வீட்​டிலிருந்து பைக்​கில் அதிகாலையில் ஆலுவா சென்ற அவர் அங்கு ஆற்​றங்​கரையோர மைதானத்​தில் குதிரையேற்ற பயிற்சி பெற்​றுள்​ளார். இதை ஜார்ஜ் டயஸ் என்ற பயிற்​சி​யாளர் அவருக்கு ‘லா​ரா’ என்ற குதிரை​யில் இப்​ப​யிற்​சியை அளித்​துள்​ளார். மக்​கள் கூடு​வதற்கு முன் அங்​குச் சென்​று​விடும் மஞ்சு வாரியர், ஒரு மாத​மாகத் தின​மும் 2 மணி நேரம் இப்​ப​யிற்​சியை மேற்​கொண்​டுள்​ளார்.

ஆட்​கள் நடமாட்​டம் அங்கு வரு​வதற்கு முன்பு அவர் அங்​கிருந்து கிளம்​பிச் சென்​றுள்​ளார். ஒரே வாரத்​திலேயே அவர் இப்பயிற்சியைச் சிறப்​பாகக் கற்​றுக்​கொண்​ட​தாகக் கூறப்படுகிறது. நடிகர்​கள் சன்னி வெய்ன், சிஜு வில்​சன், தயாரிப்பாளர் பினீஷ் சந்​திரன் ஆகியோ​ரும் இப்​ப​யிற்​சி​யின் போது கலந்​து​கொண்​டுள்​ளனர். எந்​தப் படத்​துக்​காக அவர் குதிரையேற்ற பயிற்சி பெற்​றார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்​லை.

குதிரையேற்​றப் பயிற்சி பெற்றார் மஞ்சு வாரியர்
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in