இந்திக்கு மீண்டும் செல்லாதது ஏன்? - கீர்த்தி ஷெட்டி விளக்கம்

இந்திக்கு மீண்டும் செல்லாதது ஏன்? - கீர்த்தி ஷெட்டி விளக்கம்
Updated on
1 min read

தமிழில், லிங்​கு​சாமி இயக்​கிய ‘த வாரியர்’, வெங்​கட்​ பிரபு​வின் ‘கஸ்​டடி’ ஆகிய படங்​களில் நடித்​துள்ள கீர்த்தி ஷெட்​டி, அடுத்து கார்த்​தி​யின் ‘வா வாத்​தி​யார்’, ஜெயம் ரவி​யின் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’ ஆகிய படங்​களில் நடித்துள்ளார்.

இவர் ‘சூப்​பர் 30’ என்ற இந்தி படத்​தில் சிறிய கதா​பாத்​திரத்​தில் நடித்​ததன் மூலம் சினி​மா​வில் அறி​முக​மானவர். இப்​போது மீண்டும் இந்​திக்​குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்​கத்​தில் டைகர் ஷெராஃபுடன் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்​ப​தாகவும் கூறப்​பட்​டது.

இதுபற்றி அவர் கூறும்​போது, “நான் மும்​பை​யில் பிறந்து வளர்ந்தவள் என்​ப​தால், இந்​தி​யில் நடிப்​பது எனக்கு சிறப்​பாக இருக்​கும் என்று உணர்ந்​தேன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம் போல நான் கற்​றுக்கொண்டு நடிக்க வேண்​டிய​தில்​லை. இந்தி தெரி​யும் என்​ப​தால் வசனங்​களின் அர்த்​தம் புரி​யும். இந்​தி​யில் எனக்கு சில வாய்ப்​பு​கள் வந்​தன.

கால்​ஷீட் பிரச்​சினை காரண​மாக ஒப்​பந்​த​மாக​வில்​லை. இந்​தித் திரை​யுல​கில் பணிபுரி​யும் முறை வித்​தி​யாச​மானது. அவர்​கள் அனைத்து படப்​பிடிப்பு ஷெட்​யூலையும் ஒன்​றாகவே திட்டமிடுகிறார்​கள்.தென்​னிந்​திய சினி​மா​வில் பிரித்து பிரித்து நடத்​து​வார்​கள். இதனால் இந்தி பட வாய்ப்பை ஏற்க முடி​யாத நிலை ஏற்​பட்​டது” என்​று தெரி​வித்​துள்​ளார்.

இந்திக்கு மீண்டும் செல்லாதது ஏன்? - கீர்த்தி ஷெட்டி விளக்கம்
குன்றத்தூர் | ஓடும் காரில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டதால் பரபரப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in