

நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் நடித்துள்ள படம், ‘அனோமி’. ரியாஸ் மரத் இயக்கியுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார்.
இதில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிப்.6ம் தேதி வெளியாகிறது. இதில் வழக்கமான குற்றவியல் த்ரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலல் புலனாய்வு எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதையை இயக்குநர் அமைத்துள்ளார்.
இதில் பாவனா, ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். ரஹ்மான், விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மஞ்சு வாரியர், நஸ்ரியா, கல்யாணி பிரியதர்ஷன், பார்வதி திருவோத்து, பிரியாமணி, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் டிரெய்லரை வெளியிட்டனர். அது வரவேற்பை பெற்றுள்ளது.