“என்னால் மட்டும் ஒரு படத்தை வெற்றி பெற வைக்க முடியாது!” - துல்கர் சல்​மான் விளக்கம்

நடிகர் துல்​கர் சல்​மான்

நடிகர் துல்​கர் சல்​மான்

Updated on: 
1 min read

என்னை வணிகக் கதாநாயக​னாகப் பார்க்​கும் தன்​னம்​பிக்கை இன்​னும் எனக்​குக் கிடைக்​க​வில்லை என்று நடிகர் துல்​கர் சல்மான் கூறியுள்​ளார்.

இதுபற்றி அவர் சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில், “என் தந்தை மம்​மூட்​டி​யின் சினிமா வாழ்க்கை எனக்கு முன்​மாதி​ரியாக இருக்கிறது. பிரம்​மாண்​ட​மான வணிகப் படங்​களுக்​கும் உள்ளடக்கத்​துக்கு முக்​கியத்​து​வம் தரும் படங்​களுக்​கும் சமமாக இடமளிக்க அவ​ரால் முடி​கிறது. அந்த வகை​யான அங்கீகாரத்தைத்​தான் நான் பெற விரும்​பு​கிறேன். ஆனால், அது என்​னைப் பயமுறுத்​தும் விஷயம். அத​னாலேயே ஒரு​முறை அதற்கு முயற்​சிக்க வேண்​டும் என்று ஆசைப்​படு​கிறேன். இந்தயில் சல்​மான்​கான் பற்றி கேட்கிறார்​கள்.

அவர் படத்​தில் இருந்​தாலே பார்​வை​யாளர்​களைத் திரையரங்குகளுக்கு அழைத்து வந்​து​விடுவார். அவரது படங்களுக்​குப் பெரிய ஓப்​பனிங் கிடைக்​கும். பல வருடங்​களாக, நீண்ட உழைப்​பின் மூலம் அவர் சம்​பாதித்த ரசிகர்​களின் பலம் அது. ஆனால் எனக்கு அப்​படிப்​பட்ட நிலை இல்லை. ஒரு படத்​தின் வெற்றி, எனது நட்​சத்​திர இருப்​பால் மட்​டுமே உறுதி​யாகாது. ஒரு பெரிய பட்​ஜெட் படத்​தில் நடிக்க முயற்​சிக்​கும்​போது, தயாரிப்பாளர்​களுக்​குப் பாது​காப்​பாக இருக்க வேண்​டும் என்ற எண்​ணம் எனக்கு வரும்.

ஒரு படத்தை வெற்றி பெறச் செய்ய, நான் மட்​டும் போதும் என நினைக்​க​வில்லை. அதற்​கும் அப்​பால் ஏதாவது ஒன்று இருக்க வேண்​டும். திரைப்​படத்​தில் நல்ல கதையும் நேர்​மையும் இருக்க வேண்​டும். கதைகளில் உள்ள உணர்​வு​ப்​பூர்​வ​மான நெருக்​கமே என்னை அதி​கம் ஈர்க்​கிறது. வணிக வெற்றி முக்​கியம் என்​றாலும் பார்​வை​யாளர்​களை ஈர்க்க மனதுக்கு நெருக்​க​மான ஏதாவது ஓர் அம்​சம் கதையில் இருக்க வேண்​டும் என நினைக்​கிறேன்” என்று துல்​கர் தெளிவுபடுத்​தினார்.

<div class="paragraphs"><p>நடிகர் துல்​கர் சல்​மான்</p></div>
நாலு பேர் சந்​தோஷமா சிரிக்கிறாங்கன்னா..! - ‘மூன்வாக்’ டிரெய்லர் வெளியீடு

X