

பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள, ‘மூன்வாக்’ திரைப்படத்தில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். யோகி பாபு 16 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சிறப்புத் தோற்றத்திலும் அவர் நடித்துள்ளார்.
நகைச்சுவை, இசை, நடனம் மற்றும் காதல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இதை, பிஹைண்ட்வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது. டிச.24-ல் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். இதன் அதிகாரப்பூர்வமான டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரின் இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும், “நாலு பேர் சந்தோஷமா சிரிக்கிறாங்கன்னா, எதுவும் தப்பில்லை” என்ற வசனம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.