உரு​வாகிறது ‘சிபிஐ டைரி குறிப்பு’ 6-வது பாகம்

உரு​வாகிறது ‘சிபிஐ டைரி குறிப்பு’ 6-வது பாகம்
Updated on
1 min read

மம்​மூட்டி நடிப்​பில் கே.மது இயக்​கிய படம், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. 1988-ல் வெளி​யான இப்​படத்​தில் சேது​ராம அய்​யர் கேரக்டரில் மம்​மூட்டி நடித்​திருந்​தார். எஸ்​.என்​.சு​வாமி கதை எழுதியிருந்​தார். ராதா வினோத் ராஜு என்ற ஐபிஎஸ் அதிகாரியை இன்ஸ்​பிரேஷ​னாக வைத்து மம்​மூட்​டி​யின் கேரக்​டர் உருவாக்கப்பட்​டது.

இப்​படம் வெற்றி பெற்​றதை அடுத்து கடந்த 1989-ல் இப்​படத்​தின் 2ம் பாகம் ‘ஜாக்​ர​தா’ என்ற பெயரிலும், 3ம் பாகம் ‘சேது​ராம அய்​யர் சிபிஐ’ என்ற பெயரிலும், 4ம் பாகம் ‘நேரறி​யான் சிபிஐ’ என்​றும் 5ம் பாகம் ‘சிபிஐ 5: தி பிரெய்ன்’ என்ற பெயரிலும் வெளி​யானது. இந்த 5 பாகங்​களி​லும் கே.மது, எஸ்​.என்​.சு​வாமி, மம்​மூட்​டி, முகேஷ், ஜகதி கு​மார் இணைந்து பணி​யாற்றி இருந்​தனர்.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் 6ம் பாகம் உரு​வாக இருப்​ப​தாக இயக்குநர் கே.மது தெரி​வித்​துள்​ளார். நிகழ்ச்சி ஒன்​றில் பேசிய அவர், “’சிபிஐ’ படத்​தின் 5 பாகங்​களை​யும் பார்த்​து ​விட்​டீர்​களா ? 6வது பாகத்​தைப் பார்க்க விரும்​பு​கிறீர்​களா ? அப்​படி​யென்​றால், அந்தப் படத்தை விரை​வில் எதிர்​பார்க்​கலாம்” என்று தெரிவித்துள்ளார். இதற்​கிடையே இப்​படத்தை ஜோபின் டி. சாக்கோ இயக்​கு​வார் என்று கூறப்​படு​கிறது.

உரு​வாகிறது ‘சிபிஐ டைரி குறிப்பு’ 6-வது பாகம்
Bad Girl: நாம் ‘ரம்யா’க்கள் மீது கல் வீசியே ஆக வேண்டுமா? | திரை தேவதைகள் 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in