Published : 02 Jul 2021 11:21 AM
Last Updated : 02 Jul 2021 11:21 AM
ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'மாலிக்' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
கேரளாவில் கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் ஃபகத் பாசில் நடிப்பில் உருவான 'சி யூ சூன்', 'இருள்' மற்றும் 'ஜோஜி' ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகிவிட்டன.
இதனைத் தொடர்ந்து ஃபகத் பாசில் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'மாலிக்' திரைப்படமும் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கி, எடிட் செய்துள்ள 'மாலிக்' படத்தை ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ளார்.
இதில் நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ், வினய் போர்ட், திலீஷ் போத்தன், சலீம் குமார் உள்ளிட்ட பலர் ஃபகத் பாசிலுடன் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது ஜூலை 15-ம் தேதி 'மாலிக்' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓடிடி வெளியீடு என்பது உறுதியாகிவிட்டாலும், தற்போது தான் தேதியுடன் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டோ ஜோசப் தயாரிப்பில் உருவான 'கோல்ட் கேஸ்' படமும் ஓடிடியில் வெளியிடப்பட்டு இருப்பது நினைவு கூரத்தக்கது. இதில் பிருத்விராஜ், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
fafa is our maseeha
— amazon prime video IN (@PrimeVideoIN) July 1, 2021
Meet #MalikOnPrime July 15#FahadhFaasil #NimishaSajayan #JojuGeorge #VinayForrt #DileeshPothan #DivyaPrabha #SanuJohnVarghese #SanalAman #DineshPrabhakar #ParvathyKrishna @IamAntoJoseph @AJFilmCompany @maheshNrayan #SushinSyam pic.twitter.com/4NcljRiJa3
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT