

'கே.ஜி.எஃப் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவீனா டன்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.
கன்னட மொழிப் படமான 'கே.ஜி.எஃப்', தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்துக்குரிய எதிர்பார்ப்பு அதிகமானது. இதில் வில்லனாக சஞ்சய் தத் ஒப்பந்தமாகி நடித்துள்ளார். இதன் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரவீனா டன்டன் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர் நடித்து வருவது குறித்து "தூக்கு தண்டனைக்கு உத்தரவிட்ட பெண் வந்துவிட்டார்" என்று இயக்குநர் பிரசாந்த் நீல் ட்வீட் செய்துள்ளார்.