மீண்டும் தள்ளிப் போகும் ‘ஹரி ஹர வீர மல்லு’ ரிலீஸ்?

மீண்டும் தள்ளிப் போகும் ‘ஹரி ஹர வீர மல்லு’ ரிலீஸ்?
Updated on
1 min read

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகும் சூழல் உருவாகி இருக்கிறது. பவன் கல்யாண் நடிப்பில் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கினார். இதனால் பவன் கல்யாண் குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு சென்றார்கள்.

தற்போது பவன் கல்யாணின் மகனுக்கு ஹைதராபாத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடன் இருந்து முழு மருத்துவ சிகிச்சையையும் பார்த்துக் கொள்கிறார் பவன் கல்யாண். இதனால் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் டப்பிங் பணிகள் எதிலுமே பவன் கல்யாண் கலந்துகொள்ளவில்லை. இதனை முன்னிட்டு படத்தின் வெளியீடு இன்னும் ஒரு வாரம் தள்ளிப் போகும் என கூறப்படுகிறது.

இம்முறையும் ‘ஹரி ஹர வீர மல்லு’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டால், அதிக முறை வெளியீட்டு தேதியை மாற்றிய பவன் கல்யாண் படம் என்று அறியப்படும். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in