ரூ.100 கோடி வசூலித்த ‘பிரேமலு’

ரூ.100 கோடி வசூலித்த ‘பிரேமலு’
Updated on
1 min read

நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், ‘பிரேமலு’. கிறிஸ் ஏ.டி. இயக்கிய இந்தப் படத்தை நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் தயாரித்தனர். குறைந்த பட்ஜெட்டில் உருவான, காதல், காமெடி நிறைந்த இந்தப்படம், பிப். 9-ம் தேதி வெளியானது.

கேரளாவில் வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டது. தமிழிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் உலக அளவில் இந்தப் படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in