ஜப்பானிய மொழியில் ‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’

ஜப்பானிய மொழியில் ‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’
Updated on
1 min read

பெங்களூரு: பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உட்பட பலர் நடித்த படம், ‘கே.ஜி.எஃப்’. பிரம்மாண்ட ஆக்‌ஷன் படமான இது, பான் இந்தியா முறையில் கடந்த 2018ம் வருடம் இந்தியா முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனைப் படைத்தது. இதன் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப் 2’ என்ற பெயரில் 2022-ம் ஆண்டு வெளியானது. இதில் யாஷ், நிதி ஷெட்டியுடன் இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படமும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதும் ரூ.1300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் இப்போது ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. வரும் 14ம் தேதி அங்கு வெளியாக இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாளே பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

கைதி, ஆர்ஆர்ஆர் உட்பட சில படங்கள் ஜப்பானிலும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in