ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’யில் 100 புதிய முகங்கள்

ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’யில் 100 புதிய முகங்கள்
Updated on: 
1 min read

‘பனி’ படத்​தின் வெற்​றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்​கும் 2-வது படம் ‘பரிபாடி’. இதில் அபிநயா, சாகர் சூர்யா, சாந்​தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்​மயி, சைஜு குரூப் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். காவ்யா ஃபிலிம் சார்​பில் வேணு குன்​னப்​பள்ளி தயாரிக்​கும் இப்​படம், பிரம்​மாண்​ட​மான பொருட்​ செல​வில் உரு​வாகி​யுள்​ளது.

ராஜீவ் ரவி ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு யுவன் சங்​கர் ராஜா இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் மலை​யாள சினிமாவில் அறி​முக​மாகிறார். மலை​யாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்​னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்​கும் இப்​படத்​தின் முதல் தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

“சாளக்​குடி​யில் பட​மாக்​கப்​பட்ட இத்​திரைப்​படத்​துக்​காக சுமார் 100 புது​முகங்​கள் அறி​முக​மாகிறார்​கள். அவர்​களுக்கு 4 மாதம் சிறப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்​துள்​ளனர். தற்​போது போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடந்து வரு​கின்​றன. டிசம்​பரில் படம் வெளியாகும்” என்று படக்​குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர்.

ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’யில் 100 புதிய முகங்கள்
மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனுஷ் கலந்துரையாடல்: 3,000 பேருக்கு விருந்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in