ஸ்வீட் ஸ்மெல் ஆஃப் சக்சஸ் (1957): காதலை பிரிக்கும் அதிகாரம் | ஹாலிவுட் மேட்னி 41

ஸ்வீட் ஸ்மெல் ஆஃப் சக்சஸ் (1957): காதலை பிரிக்கும் 
அதிகாரம் | ஹாலிவுட் மேட்னி 41
Updated on
3 min read

ஒரு நாளிதழ் பத்தி எழுத்​தாளர் தன் செல்​வாக்​கைப் பயன்​படுத்தி தங்​கை​யின் காதலைப் பிரிக்க முயல, இறு​தி​யில் அவரிட​மிருந்து அவர் தங்கை பிரிந்து செல்​வதே ‘ஸ்​வீட் ஸ்மெல் ஆஃப் சக்​சஸ்’ (SWEET SMELL OF SUCCESS 1957) திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை.

இரவு நேர நியூ​யார்க் நகரில், பரபரப்​பாக இயங்​கும் பத்​திரிகை அலு​வல​கத்​திலிருந்​து, அச்​சிட்ட செய்​தித்​தாள் கட்​டு​களை ஏற்​றிக் கொண்டு ஒரு வாக​னம் விரைந்து சென்று விநி​யோகிக்​கிறது.

விளம்பர முகவர் சிட்னி ஃபால்​கோ, பதற்​றத்​தோடு நியூ​யார்க் குளோப் நாளிதழை வாங்​கிப் பார்க்​கிறான். செல்​வாக்குமிக்க பத்​திரி​கைக் கட்​டுரை​யாள​ரான ஜே.ஜே.ஹன்​சக்​கரின் பத்​தி​யில் தனது வாடிக்​கை​யாளரின் பெயர் வந்​திருக்​கிற​தா? எனத் தேடு​கிறான். ஹன்​சக்​கரின் ஒரு வரி பாராட்டு உயர்த்​தும்; ஒரு வரி விமர்​சனம் வீழ்த்​தும்.

ஆனால், தன் தங்கை சூசன், ஜாஸ் கலைஞர் ஸ்டீவ் டல்​லாஸைக் காதலிப்​பதை வெறுக்​கும் ஹன்​சக்​கர், அந்​தக் காதலை முறிக்க, சிட்​னிக்கு இட்ட கட்​டளையை அவன் நிறைவேற்​றாத​தால், தொடர்ந்து 5 நாட்​களாக அவனது வாடிக்​கை​யாளர்​களைப் புறக்​கணிக்​கிறார்.

ஹன்​சக்​கரைச் சந்​திக்​கும் சிட்​னி, சூசனின் காதலைத் தடுக்க முடிய​வில்லை எனத் கூற, ‘2-வது முறை தவறு செய்​யாதே’ என எச்​சரித்து அனுப்​பு​கிறார் ஹன்​சக்​கர்.

பிறகு சிட்​னி, லியோ பார்தா என்ற பத்​திரி​கை​யாளரை மிரட்​டி, ஜாஸ் கலைஞர் ஸ்டீவைப் பற்​றித் தவறாக எழுதச் சொல்​கிறான். ஆனால் லியோ, மறுக்​கிறார். பின்​னர், கிசுகிசு எழுதும் ஓடிஸ் எல்​வெல்​லிடம் அவருடைய ரகசிய ஆசையை நிறைவேற்றி எழுத வைக்​கிறான்.

‘ஸ்​டீவ் போதைப்​பொருள் பழக்​க​முடைய​வன், கம்​யூனிஸ்ட் ஆதர​வாளன்’ என்று அவரது பத்​திரி​கை​யில் செய்தி வெளிவரு​கிறது. இதனால், ஸ்டீவ்​வின் இசைக்​குழு வேலை இழக்​கிறது.

சூசன் தன் அண்​ணனிடம், அவரது செல்​வாக்​கைப் பயன்​படுத்தி ஸ்டீவுக்கு மீண்​டும் வேலை வாங்​கித் தரச் சொல்​கிறாள். சம்​ம​திக்​கும் ஹன்​சக்​கர், ஸ்டீவை சந்​திக்க வேண்​டும் என்​கிறார். சந்​திக்​கிறார்​கள். அவதூறு செய்​திக்​குப் பின்​னால் ஹன்​சக்​கர் இருப்​ப​தாக தன்​னிடம் ஸ்டீவ் கூறிய​தாக சிட்னி அவரிடம் கூறுகிறான்.

அதை மறுக்​காத ஸ்டீவ், ஹன்​சக்​கரின் சர்​வா​தி​காரத்தை எதிர்க்​கிறான். இது ஹன்​சக்​கரின் கோபத்தை மேலும் தூண்​டு​கிறது. அந்த அசா​தா​ரண​மான சூழலில் ஸ்டீவ் அங்​கிருந்து வெளி​யேறி​விடு​கிறான்.

ஹன்​சக்​கர், தன்னை அவதூறாகப் பேசி​யதன் மூலம் அவன் தன் வாசகர்​களை அவம​தித்து விட்​ட​தாக சிட்​னி​யிடம் கூறுகிறார். தான், தன் தங்​கை​யுடன் 3 மாதம் சுற்​றுலா செல்​வ​தாக​வும், அந்த நேரத்​தில் தனது பத்​தி​யில் எழுத அனு​ம​திப்​ப​தாக​வும் மிகப்​பெரிய வாய்ப்பை சிட்​னிக்கு கொடுக்​கிறார்.

அந்த மயக்​கத்​தில் சிட்னி அவரது பழி​வாங்​கும் திட்​டத்​துக்​குச் சம்​ம​திக்​கிறான். ஹன்​சக்​கர், சிட்னி மூலம் ஸ்டீ​வின் கோட்​டில் போதைப்​பொருளை மறைத்து வைத்​து, ஊழல் காவல் அதி​காரி மூலம் அவனைக் கைது செய்ய வைக்​கிறார். தன் காதலன் காவல்​துறை​யிடம் சிக்​கிய செய்​தியை அறிந்த சூசன் மனமுடைந்து தற்​கொலைக்கு முயல்​கிறாள்.

அங்கு வந்த சிட்​னி, அவளைக் காப்​பாற்​றுகிறான். ஆனால், ஹன்​சக்​கரோ, சிட்னி தனது தங்​கை​யிடம் தவறாக நடந்​து​கொள்ள முயல்​கிறான் என அவன்​மீதே பழி​போடு​கிறார்.

இரு​வருக்​கும் நடக்​கும் வாக்​கு​வாதத்​தில், சூசனின் காதலை ஹன்​சக்​கர் பிரிக்க முயன்ற உண்​மையை உடைக்​கிறான் சிட்​னி. அண்​ணனின் அன்​பு, உண்​மை​யில் ஆதிக்க வெறி​தான் என்​பதை உணரும் சூசன், அண்​ணனை விட்டு வெளி​யேறுகிறாள். பணம், புகழ், அதிகாரம் என நியூ​யார்க் நகரமே தனது காலடி​யில் இருந்​தா​லும், இறு​தி​யில் உயி​ரினும் மேலாக நேசித்த தங்​கையை இழந்​து,வெறிச்​சோடிய மாளி​கை​யில் தனிமை​யின் கைதி​யாக நிற்​ப​தோடு படம் நிறைவடைகிறது.

எர்​னஸ்ட் லெஹ்மனின் குறு​நாவலை அடிப்​படை​யாகக் கொண்​டு, அவரும் கிளிஃ​போர்ட் ஓடெட்​ஸும் இணைந்து செதுக்​கிய இதன் திரைக்​கதை, ஊடகத் துறை​யின் அதி​கார வெறி, ஒரு மனிதனின் தார்​மீக அறத்தை எப்​படிச் சிதைக்​கும் என்​பதை ஆணித்​தர​மாகக் காட்​டு​கிறது.

புகழ்​பெற்ற அமெரிக்​கப் பத்​திரி​கை​யாளர் வோல்ட்​டர் வின்​செல்லை நிழலாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்ட ‘ஹன்​சக்​கர்’ கதா​பாத்​திரம் அன்று பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது.

நியூ​யார்க்​கின் இரவு நேர அதி​காரப் பாதாள உலகத்தை இயக்​குநர் அலெக்​சாண்​டர் மெக்​கென்ட்​ரிக் தத்​ரூப​மாகக் காட்​சிப்​படுத்​தி​யிருக்​கிறார். கூர்​மை​யான கத்​தி​போல் வெட்​டும் இதன் வசனங்​கள், திரைப்பட வரலாற்​றில் சிறந்த வசனங்​களாகக் கருதப்​படு​கின்​றன.

ஒளிப்​ப​திவு (ஜேம்ஸ் வோங் ஹோவ்): இரவு நேரச் சாலைகள், நியான் விளக்​கு​கள், இருண்ட சந்​துகளை அசாத்​தி​ய​மாகப் படமாக்​கி​யுள்​ளார். குளோஸ் அப் கோணங்​கள் கதா​பாத்​திரங்​களின் பேராசையை​யும் பயத்​தை​யும் உணர்த்​துகின்​றன.

படத்​தொகுப்பு (ஆலன் கிராஸ்​லெண்டு ஜூனியர்): மிக நேர்த்​தி​யான, அசுர வேகத் தொகுப்​பு. வீதி​களின் பரபரப்​பிலிருந்து இருண்ட கிளப்​பு​களுக்​குள் மாறும் காட்​சிகளின் பதற்​றத்​தைத் தொய்​வில்​லாமல் கடத்​தி​யிருக்​கிறார்.

இசை (எல்​மர் பெர்ன்​ஸ்​டைன்): 1950-களின் நியூ​யார்க் நகரின் அதிவேக​மான, ஆபத்தான இரவு வாழ்க்​கையை இவரது ஜாஸ் இசை கச்​சித​மாகப் பிர​திபலிக்​கிறது.

பர்ட் லன்​காஸ்​டர்: ஹாலிவுட்​டில் நேர்​மை​யான ஹீரோ​வாக நடித்த இவர், இதில் சைக்​கோத்​தன​மான, அதி​கார​வர்க்க வில்​ல​னாகத் தன் கம்​பீர​மான குரலாலும், அசைக்க முடி​யாத உடல் மொழி​யாலும் மிரட்​டி​யிருக்​கிறார். அவரது கண்​ணாடிக்​குப் பின்​னால் இருக்​கும் கண்​கள் வன்​மத்​தைக் கக்​கு​கின்​றன.

டோனி கர்​டிஸ்: தனது ‘சாக்​லேட் பாய்’ இமேஜை உடைத்​து, பிழைப்​புக்​காக எஜமானனின் காலடி​யில் விழுகிற, அதே நேரம் மற்​றவர்​களைக் குத்​திக் கிழிக்​கும் ஒரு ஒட்​டுண்ணி கதா​பாத்​திரத்​தில் வாழ்ந்​திருக்​கிறார். பல காட்​சிகளில் கைதட்ட வைக்​கும் நடிப்​பு.

சூசன் ஹாரிசன் மற்​றும் மார்ட்டி மில்​னர்: அறி​முக நாயகி​யான சூசன் பரி​தாபம் தோன்​றும் முக​பாவத்​துடன் இறு​திக்​காட்​சி​யில் அதிர​வைக்​கிறார். மார்ட்டி மில்​னர் அப்​பாவிக் காதல​னாக​வும், நேர்​மை​யான கலைஞ​னாக​வும் உயர்ந்து நிற்​கிறார்.

ஊடகங்​கள் நினைத்​தால் ஒரு​வரை ஒரே நாளில் குற்​ற​வாளி​யாக்​கவோ, புனித​ராக்​கவோ முடி​யும் என்ற ‘ஃபேக் நியூஸ்’ கலாச்​சா​ரத்தை 1950-களி​லேயே பேசி​யிருக்​கிறார்​கள். பத்​திரி​கை​களில் அச்​சாகும் அனைத்​தும் உண்​மையல்ல; பின்​னால் அதி​காரச் சந்தை இயங்​கு​கிறது என்​பதை உணர்த்​துகிறது இப்​படம்.

வெற்​றி​யின் வாசம் எவ்​வளவு இனிமை​யானதோ, பின்​னணி​யிலுள்ள மனித மனங்​கள் அவ்​வளவு துர்​நாற்​றம் வீசக்​கூடிய​வை என உரக்​கச்​ சொன்​ன இத்​திரைப்​படத்​தை, மணம்​ வீசும்​ மாலைப்​ பொழு​தில்​ கண்​டு களிக்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

- ramkumaraundipatty@gmail.com

ஸ்வீட் ஸ்மெல் ஆஃப் சக்சஸ் (1957): காதலை பிரிக்கும் 
அதிகாரம் | ஹாலிவுட் மேட்னி 41
த பிக் கிளாக் (1948) - தன்னைத்தானே கண்டுபிடிக்கும் பொறுப்பு | ஹாலிவுட் மேட்னி 40

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in