ஹாலிவுட்டை காலி செய்​கிறது ஆஸ்​கர்

ஹாலிவுட்டை காலி செய்​கிறது ஆஸ்​கர்
Updated on
1 min read

ஆஸ்​கர் விருதுகள் வழங்​கும் விழா ஒவ்​வொரு வருட​மும் ஹாலிவுட்​டில் உள்ள டால்பி திரையரங்​கில் கோலாகல​மாக நடத்தப்​பட்டு வரு​கிறது. 98-வது விருது விழா சமீபத்​தில் நிறைவடைந்தது.

அடுத்த இரண்டு வருடங்​களுக்​கும் இதே இடத்​தில் இவ்​விழா நடைபெற இருக்​கிறது. 100-வது விழாவுக்​குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்​ பகு​தி​யில் அமைந்​துள்ள பீகாக் திரையரங்​குக்கு ஆஸ்​கர் விருது வழங்​கும் விழா மாற்​றப்பட இருப்ப​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

2029ம் ஆண்டு நடக்​கும் விழா, இந்த புதிய அரங்​கில் நடக்​கும். இந்த ‘எல்ஏ லைவ்’ வளாகம், நவீன வசதி​கள் கொண்ட ‘என்டர்டெயின்​மென்ட் ஹப்’ என்​ப​தால், விழா​வின் தரமும் தொழில்​ நுட்பமும் இன்​னும் மேம்​படும் என கூறப்​படு​கிறது.

அமெரிக்​கா​வில் பெரிய நெட்​வொர்க் தொலைக்​காட்​சிகளில் ஒளிபரப்​பப்​பட்டு வந்த ஆஸ்​கர் விருது விழா இனி, யூடியூப் வழியாக உலகம் முழு​வதும் உள்ள ரசிகர்​களுக்கு நேரடி​யாக​வும், எளி​தாக​வும் சென்​றடை​யும் வகை​யில் ஒளிபரப்​பாக இருக்​கிறது.

ஹாலிவுட்டை காலி செய்​கிறது ஆஸ்​கர்
Bad Girl: நாம் ‘ரம்யா’க்கள் மீது கல் வீசியே ஆக வேண்டுமா? | திரை தேவதைகள் 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in