

ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க, இளம் நடிகரை படக்குழு தேடி வருவதாக ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தெரிவித்துள்ளார்.
நடிகர் டேனியல் கிரேக், தொடர்ந்து 5 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்ததை அடுத்து அடுத்து பாண்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட்-டாக, இட்ரிஸ் எல்பா, டாம் ஹாலண்ட், ஆரோன் டெய்லர்-ஜான்சன், ஜேக்கப் எலார், காலம் டர்னர் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என செய்திகள் வெளியாயின.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை ‘டூன்’ வரிசைப் படங்களை இயக்கிய டெனிஸ் வில்லெனுவ் இயக்க இருக்கிறார். பாண்ட் கதாபாத்திரத்துக்கான தேர்வுகள் அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இதற்காக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் காஸ்டிங் இயக்குநர் நினா கோல்டை, அமேசான் எம்.ஜி.எம் ஸ்டூடியோஸ் நியமித்துள்ளது.
இதற்கிடையே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க எனது பெயர் பரிசீலனையில் இல்லை என்று இட்ரிஸ் எல்பா தெரிவித்துள்ளார். “அவர்கள், மிகவும் குறைந்த வயது கொண்ட நடிகரைத் தேடி வருகிறார்கள். புதிய பாண்டாக நடிக்கப் போகிறவருக்கு வாழ்த்துகள். அந்தப் படம் அற்புதமாக வரப்போகிறது, அதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று இட்ரிஸ் எல்பா தெரிவித்துள்ளார்.