டிடூர் (1945): 6 நாட்​களில் எடுக்​கப்​பட்ட ரோடு மூவி | ஹாலிவுட் மேட்னி 37

டிடூர் (1945): 6 நாட்​களில் எடுக்​கப்​பட்ட ரோடு மூவி | ஹாலிவுட் மேட்னி 37
Updated on
3 min read

காதலியைத் தேடி கலி​போர்​னி​யா​வுக்கு லிப்ட் கேட்டே பயணிக்​கும் ஓர் இளைஞன், வழி​யில் ஒரு பெண்​ணுக்கு லிப்ட் கொடுத்து விதி​யின் விளை​யாட்​டில் சிக்​கிக் கொள்​வதே ‘டிடூர்’ (DETOUR -1945) படத்​தின் ஒரு​வரிக் கதை.

அல் ராபர்ட்ஸ் என்ற ஏழை இளைஞன் சாலை​யில் சோர்​வாக நடந்து வரு​கிறான். சாலை​யோர உணவகம் ஒன்​றில் அமர்ந்து அவன் காபி குடிக்​கும்​போது, அங்கே ஒலிக்​கும் குறிப்​பிட்ட இசை அவனது கடந்த காலத்தை நினை​வூட்​டு​கிறது. கதை அப்​படியே நினை​வலைகளாகப் பின்​னோக்​கிச்செல்​கிறது.

நியூ​யார்க் இரவு விடுதி ஒன்​றின் பியானோ கலைஞ​னான அல், அங்கே பாடி நடன​மாடும் சூ ஹார்​வியைக் காதலிக்​கிறான். அவளை மணக்க விரும்​பு​கிறான். அவளோ ஹாலிவுட்​டில் செட்​டிலான பிறகு மணமுடிக்​கலாம் என்று கலி​போர்​னியா புறப்​படு​கிறாள். சில நாட்​களுக்​குப் பின் தொலைபேசி​யில் அவளைத் தொடர்பு கொள்​ளும் அல், அவள் வாய்ப்​பு​களின்றி அலை​வதைக் கேட்டு நேரில் சந்​திக்​கக் கிளம்​பு​கிறான்.

அவனிடம் சாப்​பாட்​டுக்கு மட்டுமே பணம் இருப்பதால், சாலை​யில் செல்​லும் வாக​னங்​களை நிறுத்​தி, பலரிட​மும் லிப்ட் கேட்​டுத் தன் பயணத்​தைத் தொடர்​கிறான். அரிசோனா பகு​தி​யில், சார்​லஸ் ஹாஸ்​கெல் என்ற பணக்​கார ‘புக்​கர்’ தன் சொகுசு காரில் லிப்ட் தந்​து, உணவும் வாங்​கித் தரு​கிறார்.

தன் கையில் இருக்​கும் நகக்​கீறல்​களைக் காட்​டி, ஒரு முரட்​டுப் பெண் தன்​னைக் கீறி​விட்​ட​தாகக் கூறுகிறார். பயணக் களைப்​பில் ஹாஸ்​கெல் தூங்​கி​விட, அல் காரை ஓட்​டு​கிறான். இரவில் பலத்த மழை பெய்ய, காரின் மேற்​கூரையை மூட நினைத்த அல், ஹாஸ்​கெலை எழுப்​பு​கிறான். அவர் எழவில்​லை.

காரை நிறுத்தி கதவைத் திறக்​கும்​போது, ஹாஸ்​கெல் எதிர்​பா​ராமல் சரிந்து விழுந்​து, பாறை​யில் தலை அடிபட்டு இறக்​கிறார். போலீ​ஸாரிடம் கூறி​னால் தன்​னைத்​தான் கொலை​யாளி எனச் சந்​தேகப்​படு​வார்​கள் என்று பயப்​படும் அல், தன் ஏழை ஆடைகளுக்​கும் அந்த விலை​யுயர்ந்த காருக்​கும் பொருத்​தமில்லை என்​பதை உணர்​கிறான்.

எனவே, ஹாஸ்​கெல்​லின் ஆடைகளை அணிந்​து, அவரது பணம், ஓட்​டுநர் உரிமத்​தைக் கைப்​பற்றி ஹாஸ்​கெல்​லாகவே மாறுகிறான். உடலைப் பள்​ளத்​தாக்​கில் வீசி​விட்​டு, செக்​போஸ்ட்​டில் “சார்​லஸ் ஹாஸ்​கெல்” என்று பொய் சொல்லி கலி​போர்​னியா எல்​லைக்​குள் நுழைகிறான்.

பெட்​ரோல் பங்க் அருகே தனியே நின்ற வேரா என்ற பெண்​ணுக்கு அல், லிப்ட் தரு​கிறான். அது அவன் செய்த மாபெரும் தவறு! சிறிது தூரம் சென்​றதும், “காரின் உண்​மை​யான உரிமை​யாள​ரான ஹாஸ்​கெல்லை எங்கே கொன்​றாய்?” என அவனை மிரட்​டு​கிறாள். ஹாஸ்​கெல்​லின் கையில் நகக்​கீறலை ஏற்​படுத்​திய ஆபத்​தான பெண் இந்த வேரா​தான்.

அல் நடந்த உண்​மை​யைச் சொல்ல, முதலில் அதை நம்ப மறுக்​கும் வேரா, அவனது அப்​பா​வித்​தனத்​தைக் கண்டு உண்மை என உணர்​கிறாள்.

ஹாலிவுட்​டில் கணவன்​-மனை​வி​யாக வீடு எடுத்​துத் தங்​கி, காரை விற்க முயல்​கிறார்​கள்.

இன்​சூரன்ஸ் பேப்​பரைத் தேடும்​போது கிடைத்த வேறு சில ஆவணங்​களால், வேரா காரை விற்க மறுக்​கிறாள். ஹாஸ்​கெல்​லின் தந்தை 15 மில்​லியன் டாலர் சொத்​துடைய பெரும் கோடீஸ்​வரர் என்​றும், அவர் மரணப்​படுக்​கை​யில் உள்​ளார் என்​றும் செய்​தித்​தாளில் படிக்​கிறாள்.

15 வருடங்​களாகப் பிரிந்​திருக்​கும் மகனின் இடத்தை அல் பிடித்​து, அந்​தச் சொத்தை ஏமாற்​றிப் பறிக்​கத் திட்​டம் தீட்​டு​கிறாள். மாட்​டிக்​கொண்​டால் தூக்​குத் தண்​டனை உறுதி என அல் மறுக்​கிறான்.

இரவில் நன்​றாக மது அருந்​திய வேரா, அல் தன் திட்​டத்​துக்​குச் சம்​ம​திக்​கா​விட்​டால் போலீ​ஸிடம் மாட்​டி​விடு​வ​தாக மிரட்​டு​கிறாள். பின்​னர் போனை எடுத்​துக்​கொண்டு படுக்​கையறைக்​குள் சென்று கதவைப் பூட்​டிக் கொள்​கிறாள். அவளைத் தடுக்க நினைத்த அல், கதவு இடுக்​கின் வழியே வெளியே தொங்​கிக் கொண்​டிருந்த நீள​மான போன் ஒயரைத் தன் பக்​க​மாகப் பலமாக இழுக்​கிறான். மறு​பக்​கம் திடீர் அமை​தி.

அல் கதவை உடைத்​துப் பார்த்​த​போது, ஒயர் கழுத்தை இறுக்​கிய​தால் வேரா உயி​ரிழந்​திருப்​ப​தைப் பார்த்து நிலைகுலைந்து போகிறான்.

உலகத்​தின் பார்​வை​யில் அல் ராபர்ட்​ஸின் துணி​களோடு ஹாஸ்​கெல்​லின் உடல் கிடப்​ப​தால், ‘அல்’ ஏற்​க​னவே இறந்​து​விட்​டான்! சட்​டத்​தின் பார்​வை​யில் அவன் இப்​போது வேராவைக் கொன்​ற​தாகத் தேடப்​படும் குற்​ற​வாளி ஹாஸ்​கெல்! தன் உயிருக்​கு​யி​ரான காதலி சூவை​யும் பார்க்க முடி​யாமல் நாடோடி​யாகத் திரி​யும் அவன், “நான் கேட்​காமலேயே ஒரு வண்டி என்னை ஏற்​றிச் செல்​லும்” என்று நினைத்​த​படியே உணவகத்​திலிருந்து வெளி​யேறி, சாலை​யில் நடக்​கிறான்.

ஒரு போலீஸ் வேன் வந்து அவனை ஏற்​றிச் செல்​கிறது. “நீங்​கள் எவ்​வளவு நல்​ல​வ​னாக இருந்​தா​லும் விதி எந்​தவொரு காரண​மும் இன்றி உங்​களைத் துரத்​திவந்து பிடித்​து​விடும்” என்ற அவனது உள்​மனக்​குரலோடு படம் முடிவடைகிறது.

எட்​கர் ஜி. உல்​மர் இயக்​கத்​தில் 1945-ல் வெளிவந்த ‘டிடூர்’, குறைந்த பட்​ஜெட்​டில் உரு​வான உலகத் தரமான மைல்​கல் திரைப்​படம். மார்ட்​டின் கோல்ட்​ஸ்​மித்​தின் திரைக்​கதை​யில், பென் கோல்​மனின் கூர்​மை​யான வசனங்​களு​டன் இப்​படம், ஃபிலிம் நோயர் பாணிக்கே உரிய ‘வாய்​ஸ்​-ஓவர்’ எனப்​படும் கதா​நாயக​னின் பின்​னணிக் குரல் வழியே நகர்​கிறது.

ஒரு ரோடு மூவியை செட்​டு​களுக்​குள் எடுத்​த​தில் ஒளிப்​ப​தி​வாளர் பெஞ்​சமின் எச். க்ளைனின் பங்கு அளப்​பரியது. பட்​ஜெட் பற்​றாக்​குறை​யால் பின்​னணியை மறைப்​ப​தற்​காக அவர் இருளை​யும் மழையை​யும் பயன்​படுத்​திய விதம், பிற்​காலத்​தில் ஃபிலிம் நோயரின் முக்​கிய இலக்​கண​மாக மாறியது. 67 நிமிடங்​களே ஓடும் இப்​படத்​தைத் தொய்​வில்​லாமல் கச்​சித​மாகத் தொகுத்​துள்​ளார் எடிட்​டர் ஜார்ஜ் மெக்​வயர்.

‘எர்​டோடி’​யின் பின்​னணி இசை படம் முழுவதும் தனி கதா​பாத்​திர​மாகவே பயணிக்​கிறது. பியானோ இசை​யும், பாடலும் கதைக்கு மேலும் வலு சேர்க்​கின்​றன. டாம் நீல் (அல் ராபர்ட்​ஸாக): ஒரு சாமானியன் எப்​படி விதி​யின் சதி​யால் மெல்ல மெல்ல குற்​ற​வாளி​யாக மாறுகிறான் என்ற பரி​தாபத்​தை​யும், வேரா​வின் மிரட்​டலுக்​குப் பயந்து நடுங்​கும் அப்​பா​வித்​தனத்​தை​யும் இயல்​பாக வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார். (நிஜ வாழ்க்​கை​யிலும் இவர் பிற்​காலத்​தில் கொலை வழக்​கில் சிறை சென்​றார்).

ஆன் சாவேஜ் (வே​ரா​வாக): ஹாலிவுட் சினிமா வரலாற்​றிலேயே மிகக் கொடூர​மான, இரக்​கமற்ற ‘ஃபெம் ஃபெட்​டேல்​’க​தா​பாத்​திரங்​களில் இவருக்கு முக்​கிய இடமுண்​டு. படத்​தில் இவரது குரலும், பார்​வை​யும், உக்​கிர​மான நடிப்​பும் மிரள வைக்​கின்​றன. கிளாடியா ட்ரேக் (சூ ஹார்​வி​யாக): ஒரு லட்​சி​யத்​தைத் தேடும் பாடகி​யாகச் சொற்ப நேரமே வந்​தா​லும் மனதில் நிற்​கும் நடிப்​பு.

நான்கு முக்​கிய கதா​பாத்​திரங்​களை மட்​டுமே கொண்​டு, வெறும் ஆறே நாட்​களில் எடுக்​கப்​பட்ட ‘டிடூர்’, இன்று அமெரிக்​கா​வின் தேசிய திரைப்பட காப்​பகத்​தில் போற்​றிப் பாது​காக்​கப்​படும் முதல் பி-கிரேடு படம் என்ற அந்​தஸ்​தைப் பெற்​றுள்​ளது.

நியூ​யார்க்​கி​லிருந்து கலி​போர்​னியா நோக்​கிப் பயணிக்​கும் ஒரு ரோடு மூவியை, ஸ்டூடியோ​வின் சுவர்​களுக்​குள் அசாத்​திய அழகியலுடன்​ படமாக்​கிய இந்​தச்​ சிறிய பட்​ஜெட்​ மாஸ்​டர்​பீஸை, உங்​கள்​ ஓய்​வு நேரத்​தில்​ கண்​டிப்​பாகப்​ பார்க்​கலாம்​!

(செவ்​வாய்​ தோறும் படம் பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

டிடூர் (1945): 6 நாட்​களில் எடுக்​கப்​பட்ட ரோடு மூவி | ஹாலிவுட் மேட்னி 37
எம் (1931): அத்தனை சினிமா பாணிகளுக்கும் ஆதி புள்​ளி! | ஹாலிவுட் மேட்னி 36

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in