புதிய காட்​சிகளு​டன் மீண்​டும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’

புதிய காட்​சிகளு​டன் மீண்​டும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’
Updated on
1 min read

உலகம் முழு​வதும் வரவேற்​பைப் பெற்ற ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்​படம் மீண்​டும் வெளி​யாக இருப்​ப​தாக அதிகாரப்பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மார்​வல் சினி​மாட்​டிக் யுனிவர்​ஸின் ‘அவெஞ்​சர்​ஸ்: இன்​பினிட்டி வார்’ என்ற திரைப்​படத்​தின் தொடர்ச்​சி​யாக கடந்த 2019-ம் ஆண்டு வெளி​யான திரைப்​படம், ‘அவெஞ்​சர்​ஸ்: எண்ட்​கேம்’. ரூசோ சகோ​தரர்​கள் இயக்​கத்​தில், ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்​ஸ், மார்க் ருஃப்​பால்​லோ, கிறிஸ் ஹோம்​ஸ்​வோர்த், ஸ்கார்​லெட் ஜோஹான்​சன், டான் செடில், ஜெர்மி ரேன்​நேர் உள்பட பலர் நடித்த இப்​படம், வசூலில் சாதனைப் படைத்​தது.

இந்​நிலை​யில் இதன் அடுத்த வரிசை படமான, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிச.18-ல் வெளி​யாக இருக்​கிறது. மார்​வல் ஹீரோக்​கள் பெரும்​பாலோனோர் நடித்​துள்ள இப்​படத்​துக்கு எதிர்​பார்ப்பு உள்ளது. அதன் வெளி​யீட்​டுக்கு முன்​பாக மார்​வலின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்​கேம்’ படத்தை ‘எண்ட்​கேம்​-என்​கோர்’ என்ற பெயரில் செப். 25-ம் தேதி, ஆங்​கிலம், தமிழ், தெலுங்​கு, இந்தி மொழிகளில் ரீ ரிலீஸ் செய்ய உள்​ளனர்.

இப்​படம் ஐமேக்ஸ் மற்​றும் மார்​வெல் ஸ்டூடியோஸின் ‘இன்ஃபினிட்டி விஷன்’ எனும் புதிய ‘ஃபார்​மட்’ திரையரங்​கு​களி​லும் வெளி​யாகிறது. இதன் மூலம் பெரிய திரை, சிறப்​பான ஒலி அமைப்பு என சிறந்த சினிமா அனுபவத்தை இந்த ‘இன்ஃபினிட்டி விஷன்’ வழங்​கு​கிறது. இப்​படத்​துடன் ‘அவெஞ்​சர்​ஸ்: டூம்​ஸ்​டே’ திரைப்​படத்​தின் கதை​யுடன் தொடர்​புடைய புதிய காட்​சிகள் சேர்க்​கப்பட்​டுள்​ளன.

புதிய காட்​சிகளு​டன் மீண்​டும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’
நேபாள வெள்ள உயிரிழப்பு 160+ ஆக அதிகரிப்பு; இந்தியர்கள் பலர் உட்பட 700+ பேரை தேடும் பணி தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in