நேபாள வெள்ள உயிரிழப்பு 160+ ஆக அதிகரிப்பு; இந்தியர்கள் பலர் உட்பட 700+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள ராணுவத்தால் பத்திரமாக மீட்கப்பட்ட நபர்

நேபாள ராணுவத்தால் பத்திரமாக மீட்கப்பட்ட நபர்

Updated on
2 min read

காத்மாண்டு: நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்​கும் மேற்​பட்​டோரைத் தேடி வரு​கின்​ற​னர். இந்நிலையில், கும்​பகோணத்​தில் இருந்து சுற்​றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பிய​தாக​வும், மற்ற 37 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​ட​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு காரண​மாக கோசி, திரிசூலி நதி​களில் வரலாறு காணாத வகை​யில் நேற்று வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

மலைச்​சரி​வு​களில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்​ளநீர் கிரா​மங்​கள், பாலங்​கள் மற்​றும் முக்​கிய நீர்​மின் திட்​டங்​களை அடித்​துச் சென்று பேரழிவை ஏற்​படுத்​தி​யது. ஆற்​றுப் படு​கையை ஒட்​டி​யுள்ள அடுக்​கு​மாடிக் கட்​டடங்​கள் நொடிப் பொழு​தில் வெள்​ளத்​தில் சரிந்து விழுந்​தன. பெரும் பாலங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. இதுதொடர்​பான ஏராள​மான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

வெள்​ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்​கும் மேற்​பட்​டோரைத் தேடி வரு​கின்​ற​னர். இந்நிலையில், கும்​பகோணத்​தில் இருந்து சுற்​றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பிய​தாக​வும், மற்ற 37 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்​ட​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

468 சுற்றுலா பயணிகளை காணவில்லை!

நேபாள சுற்றுலாத் துறை செய்தித் தொடர்பாளர் சுராஜ் கிமிரே கூறுகையில், “கிட்டத்தட்ட 468 சுற்றுலாப் பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களில் 75 பேர் நேபாளிகள். 393 பேர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்.” என்றார்.

அவசர தொலைபேசி எண்​கள்:

நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் அவசர தொலைபேசி எண்​களை அறி​வித்​துள்​ளது. தொலைபேசி / வாட்​ஸ்​அப்: +977 985 131 6807 | +977 970 910 7500 ஆகிய எண்​களைத் தொடர்பு கொண்டு விவரங்​கள், உதவி​கள் பெறலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 92895 16712 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

கேரள அரசு 1800 425 3939 (கட்டணமில்லா எண்), +91 88020 12345 (வெளிநாடுகளில் இருந்து மிஸ்டு கால் கொடுக்க) அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

கர்நாடாக மாநில வருவாய் துறை, 1070 / 080-22253707 எண்களையும், seockarnataka@gmail.com என்ற இமெயில் முகவரியையும் அறிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்:

வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட வழியெங்கிலும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், வெள்ளப் பெருக்கினால் ராட்சத பாறைகளும், சேறும் சகதியும் மிகுந்து கிடப்பதால் மீட்புப் பணிகள் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது ஆங்காங்கே பதிவான சிசிடிவி காட்சிகள், சிலர் எடுத்த வீடியோக்கள் ஆதாரத்தின்படி உயிரிழப்புகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகார்கள் கூறுகின்றனர்.

வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையத் திட்ட கட்டமைப்புகள் இந்த வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

<div class="paragraphs"><p>நேபாள ராணுவத்தால் பத்திரமாக மீட்கப்பட்ட நபர்</p></div>
Flash Floods: அதென்ன திடீர் வெள்ளப் பெருக்கு? - நேபாளம் அடிக்கடி பேரிடரில் சிக்குவதன் பின்புலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in