ஆஸ்கர் விருது விழாவில் ஜேம்ஸ் பாண்டுக்கு கவுரவம்!

ஆஸ்கர் விருது விழாவில் ஜேம்ஸ் பாண்டுக்கு கவுரவம்!
Updated on
1 min read

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதுவரை 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் 97-வது ஆஸ்கர் விருது, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில், இந்திய நேரப்படி நாளை காலை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தைக் கவுரவப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன மாதிரியான கவுரவம் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாண்ட் பட தயாரிப்பாளர்களான பார்பரா ப்ரோக்கோலி, மைக்கேல் ஜி வில்சன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜேம்ஸ் பாண்ட் பட தீம் பாடல்கள் தொடர்பான இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in