Published : 19 Dec 2018 03:38 PM
Last Updated : 19 Dec 2018 03:38 PM

சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.20 | படக்குறிப்புகள்

காலை 9.45 மணி | VISION | DIR: NAOMI KAWASE  | FRANCE | 2018 | 109'

மிகவும் அரிதான மூலிகையை தேடி ஜப்பான் செல்கிறார் ஜியானே. அவரது பயணத்தில் வனத்துறை ரேஞ்சர் டோமோவை சந்திக்கிறார். டோமா அந்த பெண்ணுக்கு உதவியாக இருக்கிறார். அவரது தேடலுக்கு உதவுகிறார். ஜப்பான் வனப்பகுதியையும், ஆச்சரியப்பட வைக்கும் உயிரினங்கள், தாவரங்களை பற்றிய புரிதலையும் விளக்குகிறது. அராட்டா டோடோவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவில், மலையின் இயற்கைக் காட்சிகள் மனம்கரைந்து ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.

படத்தின் ட்ரெய்லர்

பகல் 12.15 மணி | SMUGGLING HENDRIX  | DIR: MARIOS PIPERIDES | CYPRUS | 2018 | 93'

காலம் இசையைப் போற்றிக் காப்பாற்றும். ஆனால், சில இசைக் கலைஞர்களை கைவிட்டுவிடும். இயானிஸ் அப்படிப்பட்ட ஓர் இசைக் கலைஞன். கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இருக்கும் எல்லைப் பிரச்சினை, அவனைத் தொல்லைப்படுத்துகிறது. எப்போதும் பிரச்சினையில் இருக்கும் சைப்ரஸ் நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட முடிவு செய்கிறான். நாயகன் எடுத்த முடிவை அவன் வளர்க்கும் நாய் ஜிம்மி தடுக்கிறது. அவன் நாட்டை விட்டு விலக முயல, ஜிம்மி வீட்டை விட்டு விலகி ஓடி விடுகிறது. தீவின் கிரேக்க எல்லைக்கும் துருக்கி எல்லைக்கும் நடுவே இருக்கும் ஐக்கிய நாடுகள் நிலப்பரப்புக்குள் நுழைந்து விடுகிறது. மனம் மாறத் தயாராக இல்லாத நாடுகளுக்கிடையே, விலங்குகள் இடம் மாறத் தடை இருக்கிறது. அப்படியென்றால் ஜிம்மி? ஜிம்மியின் மீது தீராத அன்பு கொண்ட இயானிஸ் ஜிம்மியை எப்படியும் தன்னோடு எடுத்துச் செல்ல தீர்மானிக்கிறான். அதற்கு அவனுக்கு உதவ வருகிறார் ஒரு துருக்கிய குடியேறி.  சட்டதிட்டங்களை மீறி, தன் உற்ற நண்பன் ஜிம்மியை மீட்க இயானிஸ் செய்யும் தசாவதார சாகசங்கள் பலித்ததா? இத்திரைப்படம் 3 விருதுகள் பெற்றுள்ளது. 6 பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 2.45 மணி | A TWELVE YEAR NIGHT / La noche de 12 años  | DIR: ALVARO BRECHNER | URUGUAY | 2018 | 122'

இலையுதிர் காலத்தில் ஒரு இரவு. மூன்று அரசியல் கைதிகள் அவர்கள் சிறை அறையிலிருந்து, ராணுவத்தின் ரகசிய பரிசோதனைக்காக மாற்றப்படுகின்றனர். இந்த மூவரும், தனித்தனியாக, ஒரு சிறிய இருண்ட அறைகளில் அடுத்த 12 வருடங்களைக் கழிக்கப்போகின்றனர். இந்த மூவரில் ஒருவர் எதிர்காலத்தில் உருகுவேவின் அதிபராக உருவாகவுள்ள பேப் முஜிகா. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான படம்.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 4.45 மணி ------ திரையிடல் இல்லை ------

மாலை 7.00 மணி ------ திரையிடல் இல்லை ------

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x