

நடிகை ராஷி கன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது புதிய இந்திப் படம் ஒன்றில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது.
அங்கு அவர் தங்கி இருந்த கேரவனில் அவருடைய கைப்பையில் இருந்து ரூ.50 ஆயிரத்தை ஒருவர் திருட முயன்றுள்ளார். அவரை படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பாதுகாப்புக் குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர். அவர் கேரவன் ஊழியர் என்பது தெரியவந்தது.
பின்னர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அவரை வெளியேற்றினர். இச்சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இது பற்றி நடிகை ராஷி கன்னா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பணம் அவருடையது அல்ல என்றும் அவருடைய மானேஜர் பணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.