“சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?” - வைரல் வீடியோவால் ரசிகர்கள் கவலை

“சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?” - வைரல் வீடியோவால் ரசிகர்கள் கவலை
Updated on
1 min read

மும்பை: நடிகர் சல்மான் கானின் புதிய தோற்றம் அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

அண்மையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது தற்போதைய தோற்றம் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், சல்மான் கான் வழக்கத்திற்கு மாறாக உடல் மிகவும் மெலிந்து காணப்படுகிறார். வழக்கமாக டிப்-டாப் ஆக உடையணியும் அவர் மிகவும் சாதாரண உடையில் தொடர்ந்து இருமியபடி அங்கிருப்பவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். அவரது இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள், “சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? அவருக்கு உடல்நிலை சரியில்லையா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் கம்பீரமான தோற்றத்துடன் வலம் வரும் சல்மான் கானின் இந்த தோற்றம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சல்மான் கான் தற்போது தனது அடுத்த படமான 'மாத்ருபூமி' படத்தின் வெளியீட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அபூர்வா லக்கியா இயக்கத்தில், சித்ராங்கதா சிங் மற்றும் முகேஷ் ரிஷி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தற்போது சென்சார் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறது. 

படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் இறுதி செய்யப்படாததால், இப்படம் 2027-ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டாலும், படத்தயாரிப்பு நிறுவனம் அந்தத் தகவலை மறுத்துள்ளது.

“சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?” - வைரல் வீடியோவால் ரசிகர்கள் கவலை
‘கட்டா குஸ்தி’ இயக்குநருடன் இணையும் கென் கருணாஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in