

‘லவ் & வார்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியினை முடிவு செய்துள்ளது படக்குழு. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்பீர் கபூர், விக்கி கெளசல் மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லவ் & வார்’. இதன் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் உள்ளது. சஞ்சய் லீலா பன்சாலிக்கு உடல் நிலை சரியான உடன் மீண்டும் இறுதி கட்டப் படப்பிடிப்பினை தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.
‘லவ் & வார்’ படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தற்போது இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
அதற்குள் ஒட்டுமொத்த படத்தின் பணிகளையும் முடிக்க தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. வலுவான உணர்ச்சிகள் நிரம்பிய ஒரு தீவிரமான காதல் காவியமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தினை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ‘லவ் & வார்’ படத்துக்கு முன்பாக நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.