சல்மான் கானின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சல்மான் கானின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

சல்மான் கான் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டது.

சல்மான் கானின் அடுத்த படத்தினை வம்சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பினை தொடங்கியுள்ளது படக்குழு.

இப்படத்தினை தில் ராஜு பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதில் சல்மான் கான், நயன்தாரா உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வும் முடிந்துவிட்டது. இதனை, விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. இதற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிவார் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. விஜய் நடித்த ‘வாரிசு’ படத்துக்குப் பிறகு வம்சி இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in