

பிரபல பாலிவுட் நடிகை மதுபாலா, குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி 1950-களில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். ‘நீல் கமல்’, ‘அமர்’, ‘சல்தி கா நாம் காடி’ உள்பட சுமார் 70 படங்களில் நடித்துள்ள இவர், தனது 36 வயதில் மரணமடைந்தார்.
இவருடைய வாழ்க்கை கதை திரைப்படமாக எடுக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. பட்ஜெட் காரணமாக சிலமுறை ஒத்தி வைக்கப்பட்ட மதுபாலாவின் பயோபிக் இப்போது உருவாக இருக்கிறது. பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை தயாரிக்கிறார். ஜஸ்மீத் கேரீன் இயக்குகிறார்.
இவர் ஆலியா பட் நடித்த ‘டார்லிங்ஸ்’ படத்தை இயக்கியவர். இதில் மதுபாலாவாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இதை படக்குழு மறுத்துள்ளது.
“மதுபாலாவாக கியாரா அத்வானி நடிப்பதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. அது அடிப்படை ஆதாரமற்ற செய்தி”என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு யார் நடிக்கிறார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.