ராமாயணா 2-ம் பாகம் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

ராமாயணா 2-ம் பாகம் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?
Updated on: 
1 min read

நிதேஷ் திவாரி இயக்​கத்​தில் ‘ராமாயணா’ திரைப்​படம் 2 பாகங்களாக உரு​வாகி​யுள்​ளது. இதில் ரன்​பீர்கபூர் ராம​ராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்​துள்​ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார்.

பிரம்​மாண்ட கிராபிக்ஸ் காட்​சிகளு​டன் உரு​வாகி​யுள்ள இப்படத்தின் டிரெய்​லர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்​னடம், மலையாளம் உள்​ளிட்ட மொழிகளில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்​ளது. இப்​படத்​தின் முதல் பாகம் தீபாவளியை முன்​னிட்டு நவ.5-ம் தேதி வெளியாகிறது. 2-ம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறி​விக்​கப்பட்​டது. ஆனால், அதன் வெளியீடு தள்​ளிப் போகும் என்று கூறப்​படு​கிறது.

ராவணன் தொடர்​பான காட்​சிகள் 2-ம் பாகத்​தில்​தான் அதி​கம் இடம்​பெற உள்​ளது. அப்​போது நடக்​கும் போர்க் ​காட்​சிகளை மிகவும் பிரம்​மாண்​ட​மாக, இது​வரை உரு​வாக்​காத வகை​யில் படமாக்க தயாரிப்​பாளர் நமித் மல்​ஹோத் ராவும் இயக்​குநர் நிதேஷ் திவாரியும் முடிவு செய்​துள்​ளனர்.

உல​கத் தரத்​திலான மிகச் சிறந்த மற்​றும் தனித்​து​வ​மான காட்சிகளாக அது இருக்க வேண்​டும் என்று நினைப்​ப​தால் அதன் படப்​பி​டிப்​புக்​காக இன்​னும் சில காலம் தேவைப்​படு​கிறது என்​றும் அத​னால் 2-ம் பாகத்​தின் ரிலீஸ் தேதியை 2028-ம் ஆண்​டுக்கு தள்ளி வைத்​துள்​ள​தாகவும் கூறப்​படு​கிறது.

ராமாயணா 2-ம் பாகம் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?
கிராமப்புற குழந்தைகள் உயர்கல்வி பெற மாணவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்: சென்னை ஐஐடி இயக்குநர் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in