ஆஸ்கர் ரேஸ் - ‘ஹோம்​பவுண்ட்’ ஏமாற்​றம், ‘சின்னர்​ஸ்’ சாதனை!

ஆஸ்கர் ரேஸ் - ‘ஹோம்​பவுண்ட்’ ஏமாற்​றம், ‘சின்னர்​ஸ்’ சாதனை!
Updated on
1 min read

ஆஸ்​கர் விருதுக்​காக இந்​தியா சார்​பில் அனுப்​பப்​பட்ட ‘ஹோம்​பவுண்ட்’ திரைப்​படம் சிறந்த சர்​வ​தேச திரைப்​படத்​துக்​கான இறுதிப் பட்​டியலில் இடம்​பெற​வில்லை.

98-வது ஆஸ்​கர் விருது வழங்​கும் விழா, அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்​ஸில் மார்ச் 15-ம் தேதி நடை​பெற இருக்​கிறது. இதற்​காக இறு​தித் திரைப்பட பட்​டியல் சமீபத்​தில் வெளி​யிடப்​பட்​டது. இதில் இந்​தியா சார்​பில் அதி​காரப்​பூர்​வ​மாக அனுப்​பப்​பட்ட ‘ஹோம்​பவுண்ட்’ திரைப்​படம் இறு​திப் பட்​டியலில் இடம்​பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது.

இதில் ரியான் கூக்​லர் இயக்​கிய ஹாலிவுட் படமான ‘சின்​னர்​ஸ்’ திரைப்படம் 16 பரிந்​துரைகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் அகாடமி விருது வரலாற்​றில் அதிக பரிந்​துரைகளைப் பெற்​ற​தாக இப்​படம் மாறி​யுள்​ளது. முன்பு ‘ஆல் அபவுட் ஈவ்’ (1950), ‘டைட்​டானிக்’ (1997), ‘லா லா லேண்ட்​’(2016) ஆகிய ​படங்கள், 14 பிரிவு​களில் பரிந்​துரைக்​கப்​பட்​டிருந்தன.

மைக்​கேல் பி ஜோர்​டான் 2 வேடங்​களில் நடித்​துள்ள மியூசிக்​கல் த்ரில்​லர் படமான ‘சின்​னர்​ஸ்’, 1930-களில் அமெரிக்​கா​வின் மிஸ்​ஸிஸிப்பி மாகாணத்​தில் நில​விய இனவெறி பின்​னணி​யில் ரத்​தம் குடிக்​கும் டிராகுலாவை மையப்​படுத்​திய கதையைக் கொண்​டது. சிறந்த படம், சிறந்த இயக்​குநர்​, சிறந்​த நடிகர்​ உள்​ளிட்​ட 16 பிரிவுகளில்​ இந்​தப்​ படம்​ போட்​டி​யிடு​கிறது.

ஆஸ்கர் ரேஸ் - ‘ஹோம்​பவுண்ட்’ ஏமாற்​றம், ‘சின்னர்​ஸ்’ சாதனை!
Swathi Mutthina Male Haniye: மரணப் பரிசாக வந்த பிரேரனா | திரை தேவதைகள் 02

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in