குடி​யிருப்​பில் துப்​பாக்​கிச் சூடு சம்பவம்: நடிகர் கமால் ஆர் கானுக்கு ஜாமீன்

குடி​யிருப்​பில் துப்​பாக்​கிச் சூடு சம்பவம்: நடிகர் கமால் ஆர் கானுக்கு ஜாமீன்

Published on

மும்பை அந்​தேரி​யில் உள்ள ஒஷிவ​ரா​வில் நாளந்தா சொசைட்டி என்ற அடுக்​கு​மாடிக் குடி​யிருப்பு உள்​ளது. கடந்த 18-ம் தேதி அங்கு துப்​பாக்​கிச் சூடு நடை​பெற்​றது.

இதில் 2வது மாடி​யில் உள்ள எழுத்​தாளர் நீரஜ் குமார் மிஸ்ரா என்பவரது வீட்​டிலும் 4-வது மாடி​யில் இருந்த மாடல் பிரதீக் பெய்ட் வீட்டிலும் துப்​பாக்​கிக் குண்டு பாய்ந்​தது. குடி​யிருப்பு வாசிகள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​திய இந்த சம்​பவம் தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்தி இந்தி நடிகர் கமால் ஆர் கானை கைது செய்தனர். 14 நாள் நீதி​மன்ற காவலில் வைக்கப்பட்டார்.

அவரிடம் இருந்த துப்​பாக்​கியை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். உரிமம் பெற்ற துப்​பாக்​கியைப் பயன்​படுத்​தி​ய​தாக​வும், யாருக்கும் தீங்கு விளைவிக்​கும் நோக்​கம் தனக்கு இல்லை என்றும் கமால் ஆர் கான் கூறிய​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் மும்பை ரயில்வே நீதி​மன்​றம் அவருக்கு ஜாமீன் வழங்​கி​யுள்​ளது.

அவர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் சனா ரயீஸ் கான் கூறும்​போது, “அவரது கைது தன்​னிச்​சை​யான முறை​யில் அரசி​யலமைப்​புப் பாது​காப்​பு​களை முற்​றி​லும் புறக்​கணித்து மேற்கொள்​ளப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு நிற்​காது. இது சட்ட செயல்​முறை​யின் துஷ்பிரயோகம் மட்​டுமே” என்று தெரி​வித்​தார்.

குடி​யிருப்​பில் துப்​பாக்​கிச் சூடு சம்பவம்: நடிகர் கமால் ஆர் கானுக்கு ஜாமீன்
மத்திய பட்ஜெட் 2026-27: முக்கிய அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in