‘ராமாயணா’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து

‘ராமாயணா’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து
Updated on: 
1 min read

ரன்​பீர் கபூர், சாய் பல்​ல​வி, யாஷ் நடித்​து​வரும் படம், ‘ரா​மாயணா’. நிதேஷ் திவாரி இயக்​கும் இப்​படத்​தின் முதல் பாகம் தீபாவளிக்கு வெளி​யாக இருக்​கிறது. 2-ம் பாகம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளி​யாக இருக்​கிறது.

இந்​தப் படத்​துக்​காக மும்பை பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸில் பிரம்​மாண்​ட​மான செட் அமைத்து படப்​பிடிப்பு நடை​பெற்று வரு​கிறது. இந்த வளாகத்​துக்கு வெளியே அமைக்​கப்​பட்​டிருந்த தற்​காலிக அரங்கு ஒன்​றில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்​பட்​டது. அதிர்​ஷ்ட​வச​மாகத் தீ உடனடி​யாகக் கட்​டுக்​குள் கொண்டு வரப்​பட்​ட​தால், யாருக்​கும் காய​ம் ஏற்​பட​வில்​லை. பெரும் பொருட்​சேத​மும் தவிர்க்​கப்​பட்​டது.

இத்​தகவலை மேற்​கிந்​திய திரைப்பட தொழிலா​ளர்​கள் கூட்​டமைப்​பின் தலை​வர் பி.என்​.​தி​வாரி உறுதி செய்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “சில நாட்​களுக்கு முன்பு அரு​கிலுள்ள ஒரு பகு​தி​யில் தீ விபத்து ஏற்​பட்​டது, அதைத் தொடர்ந்து அனைத்து தயாரிப்​பாளர்​களை​யும் தொடர்​பு​கொண்​டு, முறை​யான பாது​காப்பு நடவடிக்​கைகள் செய்​யப்​பட்​டுள்​ளதை உறுதி செய்​யு​மாறு கேட்​டுக்​கொண்​டோம்.

இருப்​பினும், கவனக்​குறைவு காரண​மாக இந்த தீ விபத்து ஏற்​பட்​டுள்​ளது. இது அவர்​களுக்​கும் மற்ற படக்​குழு​வினருக்​கும் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்; இது போன்ற விபத்​துகளைத் தவிர்க்க தகுந்த முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும்” என்​றார்.

‘ராமாயணா’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து
ரஜினியின் பக்கபலத்துடன் அரசியலில் களம் இறங்குகிறார் தனுஷ்: 2031 தேர்தலில் போட்டியிட திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in