“இந்திய சினிமாவை சர்வதேச தரத்துக்கு...” - ‘ராமாயணா’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு

“இந்திய சினிமாவை சர்வதேச தரத்துக்கு...” -  ‘ராமாயணா’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு
Updated on: 
1 min read

இந்திய சினிமாவை சர்வதேச தரத்துக்கு ‘ராமாயணா’ படம் எடுத்துச் சென்றிருப்பதாக இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்துக்காக அறியப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவரது படங்களில் நாயக, நாயகிகள் முதல் அரங்கம் வரை அவ்வளவும் பிரம்மாண்டமாக இருக்கும். இவர் தீபாவளி வெளியீடாக வியாழக்கிழமை வெளியான ‘ராமாயணா’ படத்தின் பிரம்மாண்டத்தை வியந்து பாராட்டியுள்ளார்.

படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “‘ராமாயணா’ என்னவொரு அற்புதமான காட்சி. இந்திய சினிமாவில் இப்படியான காட்சிகளை பார்த்தது இல்லை. இந்திய சினிமாவை சர்வதேச தரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கும் நமித் மல்ஹோத்ராவுக்கும், நிதேஷ் திவாரிக்கும் மிகப் பெரிய பாராட்டுகள். 

அற்புதமான விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறப்பான தயாரிப்பு தரம், அருமையான காட்சிகள் மற்றும் உணர்வு. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் அற்புதமான இசையைத் தந்துள்ளனர். பிரம்மாண்டமான ஒலி.

ஒவ்வொரு கட்டத்திலும் யஷ்ஷை பார்ப்பது அத்தனை பேரானந்தம். அன்புக்குரிய வில்லன் அவர். தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரன்பீர் கபூருக்கும், சாய் பல்லவிக்கும் வாழ்த்துகள். அற்புதமான இந்த முயற்சிக்கும், இந்திய சினிமாவை பெருமைப்படுத்தியதற்கும் பெரிய பாராட்டுகள்’ என்று இயக்குநர் ஷங்கர் சிலாகித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் முதல் பாகம் நவ.5 அன்று வெளியானது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர்.

நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அதன் பிரம்மாண்ட காட்சி அமைப்புக்காக பாரட்டுகளைப் பெற்றுவருகிறது.

“இந்திய சினிமாவை சர்வதேச தரத்துக்கு...” -  ‘ராமாயணா’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு
Ramayana: விமர்சனம் - யஷ் ஆளுமையில் பிரம்மாண்ட காட்சி அனுபவம் எப்படி?
“இந்திய சினிமாவை சர்வதேச தரத்துக்கு...” -  ‘ராமாயணா’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு
கமல்ஹாசனின் அடுத்த படத் தலைப்பு ‘சண்டியர்’

X